Tuesday, 3 November 2015

துன்பத்தில் வரும் ஆன்மீக வளர்ச்சி



துன்பம் தரும் நன்மை :
          இளைஞனே , துன்பம் உலகை வளப்படுத்தியது போல வசதியும், வளமும் உள்ள வாழ்வு செய்ததில்லை.வேதனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் இனிமையான கீதங்களும் , புகழ் பெற்ற கவிதைகளும் , இதயத்தை நெகிழ வைக்கும் கதைகளும் , காவியங்களும் உருவாகியுள்ளன.
          துன்பங்களை எங்கே , இறக்கி வைப்பது என்று தெரியாமல் சுமந்து கொண்டே அலைவதால் ஒன்றின் பின் ஒன்றாக சிறு சிறு சுமைகள் சேர்ந்து எழுந்திருக்க முடியாதபடி செய்து விடுகிறது.
          துன்பம் இறைவனின் அனுமதியின் பேரில் வருகிறது  என்று ஏற்று அதை மீண்டும் இறைவனிடம் இறக்கி வைக்கிறோம் என்றால் அதுவே நமக்கு படிப்பினை தரும் சிறந்த ஆசானாக மாறி நமக்குச் கற்றுக் கொடுக்கும்.
          புனிதர்களின் வாழ்வில் துன்பங்கள் அவர்களைப் பக்குவப்படுத்தவும், புனிதப்படுத்தவும்,இறைவனுக்கு மகிமை சேர்க்கவும் உதவியுள்ளன . எனவே , பவுல் சொல்வது போல்" துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறோம். ஏனெனில் துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையால் எதிர் நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம் " என்கிறார்.
          துன்பத்தை அனுபவித்து அதிலே வெற்றி கண்ட தாவீது அரசர்" எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் வாழ்வின் விதி முறைகளை நான் கற்றுக் கொண்டேன்" என்கிறார். அவர் துன்பம் வாழ்வின் பாடத்தைக் கற்றுத் தரும் நல்ல ஆசிரியராக காண்கிறார் .உலையில் நெருப்பு எவ்வாறு பொன் வெள்ளியை சுத்தமாக்குகிறது அவ்வாறு துன்பத்தை, ஏற்கும் பக்குவம் இருந்தால் அது நம்மிடம் உள்ள தீமைகளை அகற்ற உதவும்.
          ஒரு முழு ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிட முடியுமா? அதைச் சிறு சிறு துண்டாக வெட்டி அல்லது கடித்து நன்றாகச் சுவைத்து தானே உண்ண முடியும்.
          துன்பம் என்றால் அப்படியே எடுத்துக் கொள்வது சரியல்ல.அந்த நிமிடத்தில் சந்திக்கும் துன்பத்தை எவ்வாறு  கையாள வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். துன்பத்தின் காரணங்களை சிறிது  சிறிதாக பிரித்து கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
          இன்றைய பொழுதில் நான் என்ன செய்ய வேண்டும், நாளைய தினத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? அது போதும் , இன்றும், நாளையும் மட்டும் வாழத் தேவையான ஆற்றல் எல்லோருக்குமே இருக்கிறது . ஆனால் , கடந்த காலத்திலேயோ  அல்லது வருங்கால கனவுகளிலோ வாழ்வதனால் வாழ்வில் காணும் வசந்தம் நழுவி விடுகிறது. 
எனவே, இன்றைக்குத் தேவையான ஆற்றல் துன்பத்தின் வழியாகவும் நம்மிடம் கடந்து வரலாம். கடினமான வேலையை செய்தால் கரம் கடினப்பட்டு வலி தெரியாமல் போவது போல வருகிற துன்பத்தை துணிவுடன் ஏற்கும் போது அதுவே நமது நன்மையாக மாறி நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வைக்கும்.
ஆன்மாவிற்கு அரு மருந்து:
துன்பத்திற்குப் பின்னால் ஒரு தெய்வீக ஒளி இருக்கிறது இளைஞனே ! துன்பம் என்பது நமது விருப்பத்திற்குத் தடை விதித்ததாக நினைக்கலாம். குழந்தை அழுகிறது என்பதற்காக கத்தியை விளையாடுவதற்கு தாய் கொடுப்பது உண்டா? எனவே, வளர்ந்து விட்ட நீ தாயிலும் மேலாக அன்பு செய்யும் விருப்பத்தை நிறைவு செய்யாதது ஏன்? என்று சிந்தித்துப் பார். நீர் விரும்பியது கிடைக்காவிட்டால் அது கடவுளின் மிகப்பெரிய கொடை என்று நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்த வீண்டும். விரும்பியது கிடைத்தது என்பதற்காக கத்தியை வாங்கின குழந்தை தொடர்ந்து மகிழ முடிமா? அதை விளக்கிச் சொன்னாலும்  புரியுமா? 
          அதுபோலத்தான் சில நேரம் துன்பம் ஏன் வருகிறது என்று பெரியவர்களுக்கும் புரிவதில்லை. துன்பம் இனிப்பு உரை போடப்பட்ட கசப்பு மாத்திரை. அதை ஏற்றுக்கொள்வதால் ஆன்ம நோய்  அகலும். துன்பத்தால் தூய்மையடைந்து நல வாழ்விற்கு கடந்து சென்று நிலை வாழ்வை அடைய முடியும்.துன்பம் தடைகளைத் தாண்டிச் செல்லும் பொன்னான வாய்ப்பாக கருத வேண்டும். துன்பத்திற்கும் மகிழ்வது ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டுகிறது. இன்பத்தில் இறைவனை நினைக்க நேரம் இருப்பதில்லை. துன்பத்தில் இறைவனை மறக்க முடிவதில்லை. திசை மாறிய பறவையாக பறந்து செல்லும் போது மீண்டும் சரியானப் பாதைக்கு திரும்ப உதவும் கலங்கரை விளக்கமாக துன்பம் செயல்படும். எனவே , துன்பம் வரும் போது யாரையெல்லாமோ காரணம் காட்டி மனம் வருந்துவதை விட இறைவனின் கொடை என்று ஏற்பது வாழ்வை வளப்படுத்தும்.
துன்பத்தைக் கையாள்வது எப்படி?
          துன்பத்தை துணிவுடன் எதிர் கொள்ளத் தெரிந்திருந்தால் எளிதாக வாழ்விலே சாதனை படைக்கலாம். இங்கே சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன ஒன்றையாவது பயன்படுத்தும் எண்ணத்துடன் மனதிலே பதித்து கொள்ளுங்கள்.
Ø கண்ணாடியை கையாளும் போது உடைந்து விடக்கூடாது என்று கவனமாகத் கையாளுவது போன்று துன்பத்தையும் கையாள வேண்டும். துன்பத்தையே பார்த்துக் கொண்ண்டு அதையே நினைத்துக் கொண்டிருந்தால் புதை மணலில் போராடுபவன்   போல அதிலே புதைந்து விட நேரிடும். எனவே, புயல் வீசும் போதும் இன்னல் வரும் வேளையிலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் இறை நம்பிக்கையோடு சந்திக்க  தெரிய வேண்டும். பயப்பட ஆரம்பித்தால் சிந்திக்க மறந்து போகும்,எண்ணத்தை சூழ்நிலை குறித்த கலக்கத்திலிருந்து நம்பிக்கைத் தரும் ஒன்றை நோக்கி மாற்ற வேண்டும்.
Ø துன்பத்தை பெரிது படுத்தாத வரை அது தன் போக்கிலே கிடக்கும்.அதையே நினைக்க  ஆரம்பித்தால் அட்டைப்போல ஒட்டி கொள்ளும்.(If you reject, mind will object. If you ignore, it won’t mind)
Ø “துன்ப வேளையில் என்னை நோக்கி கூப்பிடு. உன்னை விடுவிப்பேன். என்னை நீ மேன்மைப்படுத்துவாய் " என்று சொல்லும் இறைவனை நோக்கி அபயக் குரல் எழுப்பினால் கரம் நீட்டி தூக்கி விடுவார்.
Ø துன்பம் வந்த உடனே நாம் மட்டும் தான் துன்புறுவதாக எண்ணி துவண்டு போக வேண்டியதில்லை. எல்லோரும் வெவ்வேறு விதத்தில் துன்புறுகின்றனர். வாழ்க்கைப் பயணத்திலே துன்பமும் ஒரு பகுதிதான் என்று உணர்ந்திருப்பது நல்லது.
Ø துன்பத்தை கண்டு ஓடாமல் எதிர்த்து நின்று துணிவுடன் சந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பயந்து ஓடினால் நாய்கூட துரத்தி  வரும்.  எதிர்த்தால் அது பயந்து ஓடிவிடும். துன்பத்தைச் சந்திக்க அறிந்திருந்தால் வாழ்வையே சவாலாக மாற்றி  வாழ்ந்து  விடலாம்.
Ø துன்ப வேளையில் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று நம்ப வேண்டும். அவரை பங்குதாரராகக் கொண்டு வாழ்ந்தால் எந்தத் துன்பத்தையும் கையாள முடியும்.
Ø துன்பத்தைக் கொண்டே துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக,
          உறக்கம் வரவில்லை என்பது துன்பமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உறக்கமின்மைக்கு அதிக சோர்வு , பயம், சத்தம், சீதோஷ்ண நிலை இப்படியாக  பல காரணங்கள் இருக்கும். அதையே சிந்தித்துக் கொண்டிருந்தால் எதிர்மறை உணர்வுடன் போராடுகிறோம் என்று அர்த்தம். நாம் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவதையே பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் உறங்காவிட்டால் சகிக்க முடியாது என்ற எண்ணம் இருக்கிறது .அதை எதிர்த்து கட்டுப்பாட்டை மீறிய இந்தச் செயலை மனம் எதிர்க்கிறது. அதன் விளைவாக உறக்கம் இல்லாத இரவுகள் தொடர்கின்றன.ஆனால், ஏன் உறக்கமின்மையை எதிர்க்கின்றோம்? குறிப்பிட்ட நேரம் உறங்கினால் தான் ஓய்வு என்று நினைக்கிறோம்.வீணாக விழித்திருந்து படுத்திருப்பது ஓய்வாகாது என்று நினைக்கிறோம். படுத்துக்கொண்டே என்ணத்தை உறக்கத்திலிருந்து எடுத்து வேறு எண்ணங்களை நினைக்க ஆரம்பித்தாலே உடல் தளர் நிலைக்கு வந்து விடும். உறக்கம் தானாக வந்து அணைத்துக் கொள்ளும். முயற்சி செய்து பாருங்கள்.
மாறாக, உலகமே தூங்குகிறது. நாம் மட்டும் தூங்கவில்லை. இன்று தூங்காவிட்டால் நாளை எப்படி வேலைக்குச் செல்வது? உடம்பு களைப்படைந்து விடுமே என்று குழம்பிக் கொண்டே  இருந்து விட்டு தூக்கமாதிரைப் போடுவது , பிறகு அதற்கு அடிமையாவது பலருக்கு வழக்கமாகி விட்டது. தளர் நிலை பயிற்சிகள் , வேறு விதமான செயல்பாடுகளை  ஏற்றுக்கொள்வது. உறக்கமின்மையின்  காரணத்தை அறிந்து அகற்றுவது , எப்படி மூளையை விடுதலையை அனுபவிக்கும் ஒன்றாக வைத்திருக்கும்  வரை  நாம் அடிமைப்பட முடியாது .
"துன்பத்தின் வேரையே
எடுத்தாகி விட்டது
துன்பத்திற்கு முடிவு காண
முடிகிறது துன்பத்தைக்
கையாள மிகச் சிறந்த வழி
துன்பத்தை கொண்டே
துன்பத்திற்கு முடிவு
காண்பதுதான்."
என்கிறார்  டோனி  டிமெல்லோ .
மனதில் பதிக்க வேண்டியவை:
Ø மூன்று மாதங்களாக வந்த சிந்தனைகள் எப்பொழுதும் மனதில் நிறுத்த வேண்டியவை .
Ø துன்பத்தின் காரணத்தை அறிந்திடுக . சுயநல நோக்கம் என்றால் உடனே அகற்றிடுக.
Ø துன்பம் நம்மைப் பயிற்று விக்கும் நல் ஆசான்.
Ø துன்பம்  தரும் பாடத்தை உணராமல் போவது சோகம்.
Ø வெளியிலிருந்து வரும் துன்பத்தை எதிர்த்து நின்றால் அது ஓடிவிடும்.
Ø துன்பத்தை கொண்டே துன்பத்தை முடிவு கட்ட வேண்டும்.
Ø பிறருக்காக துன்பப்படுவதை துணிவுடன் அணைக்கத் தெரிந்தவர் தாம் புனிதர்.
Ø பாகற்காயும் சுவையுடையதுதான். இனிப்பு மட்டும் அல்ல , கசப்பும் சுவை தான் என்ற எண்ணம் நம்மிடம் வேண்டும்.
Ø இறைவனும் நாமும் பங்குதாரராகச் சேர்ந்து சந்திக்க முடியாத துன்பமே இருக்க முடியாது.

அழைப்பின் முக்கியத்துவம் !

''வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம்,
'நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர்,
பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்' என்றார்'' (லூக்கா 14:21).
இன்றைய நற்செய்தி நமக்கு உரைப்பது இதுவே .

பாலஸ்தீனத்திலே விருந்து அல்லது விழா பற்றிய நிகழ்வுகள், முதலிலேயே விருந்தினர்களுக்குத் தெரிவிக்கப்படும். விரைவில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது, என்கிற பொதுவான செய்தி மட்டும், முதலிலேயே அறிவிக்கப்படும். 

விருந்தினர்கள் அனைவருக்குமே இந்த செய்தி அறிவிக்கப்படும். விழா ஏற்பாடுகள் முடிந்தபின், அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டபின், மீண்டும் விருந்தினர்களுக்கு, விருந்தில் வந்து கலந்துகொண்டு, மகிழ்ச்சியில் பங்கு கொள்ள, அழைப்புவிடுக்கப்படும். முதல் அறிவிப்பே, விருந்தினர்களுக்கான நினைவூட்டல். அழைக்கப்பட்டவர்களுக்கு, எப்போதும் அழைப்பு வரலாம், என்பது நன்றாகத் தெரியும். 

அப்படித் தெரிந்திருந்தும் விருந்துக்கு வராமல் இருப்பது, விழா கொண்டாடுகிறவர்களை அவமதிக்கின்ற செயலாகும். இந்த அவமதிப்பைத்தான், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அழைத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அழைக்கப்பட்டவர்கள் சொல்லக்கூடிய காரணங்கள், வரமுடியாத அளவுக்கான காரணங்கள் இல்லை. அது தவிர்க்க முடியாத காரணங்கள் அல்ல. அவை சாதாரண காரணங்கள். 

நமது வாழ்வில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? என்பதை இந்த பகுதி உணர்த்துவதாக இருக்கிறது. புதிய வயல் வாங்கியிருப்பதைப் பார்ப்பதற்கும், மாடுகளை ஓட்டிப்பார்ப்பதற்கும், புதிய மனைவியோடு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற காரணங்கள், நொண்டிச்சாக்குகள். வர முடியாது, என்று அகம்பாவத்தில் சொல்லப்படும் காரணங்கள். அல்லது, விருந்தை ஒரு பொருட்டாக எண்ணாத, அழைத்தவரை ஒரு பொருட்டாக எண்ணாத காரணங்கள். 

இறையாட்சி விருந்தைச் சுவைப்பதுதான், அனைவருடைய வாழ்வின் நோக்கம். அப்படியிருக்கிறபோது, சாதாரண காரியங்களுக்காக, வாழ்வின் நோக்கத்தைத் தவிர்ப்பது, விளையாட்டுத்தனமாக இருக்கிறது.

நமது வாழ்விலும் எது முதன்மையோ, எது முக்கியமோ அதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், பல வேளைகளில் நாம், செய்யத் தேவையில்லாத காரியங்களுக்கு அதிகமான முன்னுரிமையும், செய்ய வேண்டிய காரியங்களை இரண்டாம்பட்சமாகவும், நாம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படிச்செய்வதால், நமது இழப்பு, மிகப்பெரிய இழப்பாக இருக்கும். 

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ஒருவர், சாக்குப்போக்குச் சொல்லி அதில் கலந்து கொள்ளாவிட்டால், அந்த மனிதன் மேல் நாம் பரிதாபப்படுவோம். பைத்தியக்காரன் என்று சொல்வோம்.

இறுதி நாட்களில் இறைவன் தரும் விண்ணக விருந்தில் கலந்துகொள்ளாமல் நொண்டிச் சாக்குச் சொல்வோர் இத்தகையோரே. தினமும் திருப்பலி விருந்தில் பங்கு பெறாது காரணம் சொல்வோரும் இக்கூட்டத்தில் சேர்வர். பிறருக்கு உதவி செய்து,ஆறுதல் அளித்து அதில் ஒரு விருந்தின் மகழ்ச்சியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தும் அதை உதறிச் செல்வோரும் இவர்களே.

வயல் வாங்குவதும், ஏர் மாடுகள் வாங்குவதும், திருமணம் முடிப்பதும், அன்றாட நிகழ்வுகள். சர்வ சாதாரண நிகழ்ச்சிகள். வாழ்வின் இத்தகு அன்றாட நிகழ்ச்சிக்காக கிடைத்தற்கரிய விருந்தை மறுப்பது அறிவுடமையாகாது. உன்னதமான, தெய்வீக ஆசீரை அனுபவிக்க, சில உலகிற்கடுத்த காரியங்களை தியாகம் செய்வதே விவேகம்.

நாம் கலந்து கொள்ளாவிட்டால், நமக்காக அந்த வாய்ப்பு காத்திருக்காது. கொஞ்ச காலம் கடந்து பார்த்துக்கொள்ளலாம் என்று பிந்தி போட முடியாது. யாருக்கும் அந்த இடம் கொடுக்கப்படலாம். ஆகவே தயாராக இருப்போம். விருந்தை உண்டு மகிழ்வோம்.

எல்லா இடத்திலும்,எந்த வேலை செய்தாலும் கடவுளின் அருளை உணர்வோம். அப்போது அவர்  நமக்கு விடுக்கும் அழைப்பின் முக்கித்துவம் புரியும் . 

ஆக, விண்ணக விருந்திற்கு நாம் நம்மை தயாராக்குவோம்.நம்மை தயாரிப்போம்.  



Monday, 2 November 2015

7 Hard Ways To Improve Your Life


1. Wake Up Early
Every morning is a fresh beginning. Every day is the world made new. Today is a new day. Today is my world made new? I have lived all my life up to this moment, to come to this day. This moment–this day–is as good as any moment in all eternity. I shall make of this day–each moment of this day–a heaven on earth. 

This is my day of opportunity. -Dan Custer
Waking up early is directly linked with improved productivity, improved quality of life and unimproved level of happiness. So don’t miss out and try to wake up early each and every day.

2. Overcome Your Fear
You only live once, so why not live your best?
All of us have fears that limit us from our true potential. Recognize what you fear and do whatever you have to do to overcome it. Release yourself.
Fear is only as deep as the mind allows.

3. Start Exercising
By exercising you don’t just improve your physical health but you improve your mental health as well. It’s literally a win-win situation.
Make it a daily habit to work out.

4. Get Out of Your Comfort Zone
Comfort is the absolute executioner of success. If you are comfortable it means you’re not doing anything new, that you’re not applying yourself and most importantly that you’re not getting anywhere.
So get out of your comfort zone and seize the moment. This is the only way to achieve success.

5. Improve your Self-Confidence
Self -Confidence is the backbone to everything one does in life. By not believing in yourself you limit yourself from your true potential. Without self-confidence a person can never become successful.
It is only necessary to have courage, for strength without self-confidence is useless. – Giacomo Casanova

6. Become an Optimist
Life is only good as we make it; so why not make it as wonderful as possible.
Always take a optimistic perspective in whatever that you do. Look for the good even if nobody else can see it and radiate positivist in the world.
Optimism is essential to achievement and it is also the foundation of courage and true progress. – Nicholas M. Butler

7. Take Action
Stop sitting on the sidelines, the best way to improve and learn is by taking action. So starting right now stop waiting for life to happen and be proactive!
The best way to predict the future is to create it. -Abraham Lincoln


Sunday, 1 November 2015

இறப்பே .. புது வாழ்வு!



''இயேசு, 'என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே
நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என்றார்'' (யோவான் 6:38)

நாளை இறந்த விசுவாசிகளின் நினைவைக் கொண்டாடுகிறோம். வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் பவுலடியாரின் வாக்கின்படி, இறந்தாலும் இவர்கள் இறைவனுக்கும், நமக்கும் உரியவர்கள் என்னும் நம்பிக்கையுடன் இறந்த விசுவாசிகளுக்காக நாளை சிறப்பாக மன்றாடுகிறோம்.  

இறந்த விசுவாசிகளுக்காக மன்றாடும் பழக்கம் காலம் காலமாக திருச்சபையில் இருந்துவந்தாலும், அறிவியலாளர் ஐன்ஸ்டீனின் வருகைக்குப் பின் இந்த நம்பிக்கை அறிவியல் வழியாகவும் வலுப்பெற்றிருக்கிறது. இது ஒரு வியப்பான தகவல்தான்.  

ஐன்ஸ்டீன் கிறித்தவர் அல்லர், ஒரு யூதர். இருந்தபோதிலும், அவரது ஒப்புமைக் கொள்கையின் தாக்கம் இறந்தோர் பற்றிய கத்தோலிக்கரின் பார்வையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஒப்புமைக் கொள்கையின்படி காலமும், இடமும் நிலையானவை  அல்ல, மாறாக ஒப்புமைக்குரியவை . 

எனவே, உடலோடு வாழும் காலத்தில்தான் காலமும், இடமும் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன. உடலைக் கடந்தபின், காலத்தையும், இடத்தையும்  நாம் கடக்க முடியும். எனவே, இறந்தவர்கள் உடலைக் கடந்தவர்களாதலால், அவர்கள் காலத்தையும், இடத்தையும் வென்றவர்களாகிறார்கள். 

எனவே, ஒருவர் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனாலும்கூட, அவருக்கு அது இன்று போலத்தான். நமக்குத்தான் இருபத்தைந்து ஆண்டுகள். எனவே, நாம் இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்தபின் அவருக்காக மன்றாடினாலும், அவருக்கு அது இறப்பின் நேரத்திலேயே பலன் கொடுக்கும். 

இதுதான் ஐன்ஸ்டீனின் தாக்கம். எனவே, என்றோ இறந்துபோன நம் உறவுகளை இன்று எண்ணிப்பார்த்து மன்றாடுவது அவர்களுக்கு என்றும் உதவுவதே. 

நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வுக்கு அழுத்தம் கொடுப்பது இறப்பு. வாழ்வின் உந்து சக்தியும் இறப்பு. நம் வாழ்வின் இலக்கின் தொடக்கமும் இறப்பே. இறுதி நாளில் இறப்பை எப்படி சந்திக்கிறோமோ அப்படி வாழ்ந்துள்ளோம் என்று பொருள். 

இறப்பை மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதன்,இவ்வுலக வாழ்வை ஆண்டவர் எதிர்பார்க்கும் விதத்தில் வாழ்ந்துள்ளான், புது வாழ்வுக்குத் தன்னை தயாரித்துள்ளான் என வெளிப்படுகிறது.

இயேசுவின் பார்வையில் இறப்பு ஒரு திருமுழுக்கு. புது வாழ்வின் தொடக்கம். இயேசு, ஒவ்வொரு சாவையும் வாழ்வின் உதயமாகக் கண்டார். 

இலாசரின் இறப்பு கடவுளின் மாட்சி வெளிப்படும் நிகழ்வாகக் காண்கிறார்.(யோவா 11'4) பன்னிரெண்டு வயது சிறுமியை உயிர்பெறச் செய்தபோது, "விலகிப் போங்கள், சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்"( மத் 9 :24) என்றபோது, இறப்பை, புத்துயிர் பெற உறங்கி விழிக்கும் அன்றாட நிகழ்வாகக் காண்கிறார்.

எவ்வாறு இறக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு வாழ வேண்டும். அமைதியாக, நிம்மதியாக, வேதனையின்றி,தனிமையின்றி சாக வேண்டுமென்றால், வாழும்போதும் அவ்வாரே வாழ வேண்டும். 

வாழ்க்கை எப்படியோ அப்படியே மரணமும். இறைவன் பாராட்ட, மனிதர் புகழ, உன் மனம் பெருமிதமடைய வாழ்ந்துகொள். மரணம் மகிழ்ச்சியாக இருக்கும். புது வாழ்வாக அமையும்.