இயேசுவின் உளவியலும், ஞானமும் எண்ண எண்ண நம்மை மலைக்க வைக்கின்றன. நாளைய நற்செய்தி வாசகம் அத்தகைய ஓர் அனுபவத்தை நமக்குத் தருகிறது.
இயேசுவின் சீடர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்துவிட்டுத் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் இயேசுவிடம் பகிர்ந்துகொண்டபோது, இயேசுவின் பதிலுரையைப் பாருங்கள்.
அவர்களைச் சற்றே ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறார். அத்துடன், தாமே அவர்களை அழைத்துக்கொண்டு ஓய்விடத்துக்கு இட்டுச் செல்கிறார். இயேசுவின் பரிவும், ஞானமும் இந்த அழைப்பில் நன்கு வெளிப்படுகின்றன.
இதே அழைப்பை இயேசு இன்றும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். நமது பல்வேறு பரபரப்பான பணிகளுக்கு இடையில் நமக்கு ஓய்வு தேவை. உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும். குறிப்பாக, இன்றைய விரைவுக் கலாசார உலகில் ஓய்வற்ற உழைப்பால் பலருக்கும் மன அழுத்தமும், பல்வேறு நோய்களும் வருகின்றன.
எனவே, நம்மை உடல், உள்ள, ஆன்ம ஓய்வெடுக்க இயேசு அழைக்கிறார். ஞாயிறு தோறும் வழக்கமான வேலைகளை விட்டுவிட்டு, வழிபாட்டில் பங்கெடுத்தல், இறைவார்த்தைக்கு செவி மடுத்தல். நற்செய்திப் பணியாற்றல், அன்புச் சேவைகள் செய்தல் போன்றவை நமக்கு இந்த மூன்று வகையான ஓய்வையும் தரும்.
ஆண்டவரே சொல்லிவிட்டார் ஆக, தேவைப்படும் போது சற்று ஓய்வேடுப்போமா?

No comments:
Post a Comment