பொறுமைக்கும் எல்லை இருக்கிறது என்று பொதுவாகச் சொல்வார்கள். பொறுத்துப்பொறுத்து பார்த்து, திருந்தாதவர்களைப் பார்த்து இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள். ஆனால், முயற்சிக்கு முடிவே இல்லை என்று சொல்வார்கள்.
நாம் எடுக்கக்கூடிய முயற்சி எப்பொது முடிய வேண்டும் என்றால், நமது உயிர்மூச்சு நிற்கிறபோதுதான். அத்தகைய முயற்சி நம் அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று என்ற பாடத்தை, இயேசு நமக்குக் கற்றுத்தருகிறார்.
மீனவர்கள் இரவெல்லாம் கண்விழித்து உழைத்திருக்கிறார்கள். முயற்சி செய்திருக்கிறார்கள். உடல் களைத்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கேற்ற பலன் இல்லை. மிகவும் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், இயேசு அவர்களை, ”ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்கிறார். சீடர்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறார்கள். இயேசு சொல்வதற்கு முன்பாக, அவர்கள் முயன்றார்கள்.
ஆனால், முடியவில்லை. முயற்சியை விட்டுவிட்டார்கள். இயேசு அந்த முயற்சியை விடக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறார். நமது வாழ்வில் முயற்சி என்கிற வார்த்தைக்கு ஓய்வே இருக்கக்கூடாது.
நேற்று சற்று ஓய்வெடுங்கள் என்று இருந்தது அதையும் இயேசுதான் சொல்கிறார்.இன்று இதையும் இயேசுதான் சொல்கிறார்.
இன்றைக்கு நாம் சிறப்பாக வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறோம். அதனை செயல்படுத்தியும் பார்க்கிறோம். விரைவில் முயற்சியை விட்டுவிடுகிறோம். அப்படி விடாது முயல்வதுதான் வாழ்க்கை. அந்த பாடத்தை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

No comments:
Post a Comment