Friday 19 May 2017

✠ புனிதர் இவோ ✠ (St. Ivo of Kermartin)

 புனிதர் இவோ 
(St. Ivo of Kermartin)


ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர் :
(Advocate of the Poor)


பிறப்பு : அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)


இறப்பு : 19 மே 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)


ஏற்கும் சமயம் "
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)


புனிதர் பட்டம் : ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)


நினைவுத் திருநாள் : மே 19


பாதுகாவல் :
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, lawyers, abandoned children)


1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17ம் தேதி பிறந்த புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஒரு கத்தோலிக்க குருவும் ஏழை மக்களுக்காக பரிந்து பேசுபவருமாவார்.


இவரது தந்தையான "ஹெலோரி" (Helori) "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis)ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris)கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும் செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும்,திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.


1284ல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லான்னேக்" (Louannec)எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.


"லான்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும் அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.

No comments:

Post a Comment