Saturday 31 October 2015

நாமும் புனிதர்களே !



''இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது'...'' (மத்தேயு 5:1-3).இது   தான் நாளைய நற்செய்தியின் முக்கியமான பகுதி.  

புனிதம் என்பது திருச்சபையால் கொடுக்கப்படும் மிகப்பெரிய மணிமகுடம். நிறைவாழ்வை தங்கள் பலவீனங்களோடு, குறைகளோடு நிறைவாக வாழ முற்பட்டவர்களை, தாய்த்திருச்சபை புனிதர்கள் என்று, போற்றி பெருமைப்படுத்துகின்றது. திருச்சபையினால் அங்கீகரிக்ப்பட்ட புனிதர்கள், இன்னும் வெளிஉலகிற்கு தெரியாமல் புனித வாழ்க்கை வாழ்ந்தவர்களும், நிச்சயம் இந்த உலகத்தில் ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்களையெல்லாம் இந்த நாளிலே நாம் சிறப்பாக நினைவு கூற வேண்டும்.


இந்த விழாவானது, அனைத்து ஆன்மாக்கள் தினத்திற்கு முன்னதாக, நவம்பர் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில், கீழைத்திருச்சபையில் நினைவுகூர்ந்து சிறப்பிக்கப்பட்ட மறைசாட்சிகளின் நினைவுநாளே பிற்காலத்தில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. திருத்தந்தை மூன்றாம் கிரகோரி அவர்கள், புனித பேதுரு பேராலயத்தில் அனைத்து புனிதர்களையும் மறைசாட்சிகளையும் நினைவுகூறும் அடையாளமாக, சிற்றாலயம் ஒன்றை எழுப்பி, அவர்களை மாட்சிமைப்படுத்தினார்.

 இதுவே நவம்பர் முதல் தேதியில் அனைத்து புனிதர்களின் தினமாக அனுசரிக்க, தூண்டுதலாக அமைந்தது. இடைக்காலத்தில் அனைத்து புனிதர்களின் விழாவிற்காக இரவு திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டம் தொடங்கியது. பின்னர், 1955 ம் ஆண்டில் நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பில், இவ்விழாவிற்கான திருவிழிப்பு மற்றும் எட்டுநாள் கொண்டாட்டங்கள் நீக்கப்பட்டன. 

”இயேசு திருவாய் மலர்ந்து” என்கிற வார்த்தையின் அர்த்தத்தை நாம் பார்ப்போம். இது ஏதோ, ஒரு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. மாறாக, அர்த்தத்தோடு பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு, கிரேக்க மொழியில் இரண்டு அர்த்தங்கள் தரப்படுகிறது.

 1. கடவுளின் இறைவாக்கை அறிவிப்பதைச் சொல்லும் வார்த்தைகள். இந்த வார்த்தைகளுக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. இந்த வார்த்தைகளுக்கு தனி அழுத்தம் உண்டு. இந்த வார்த்தைகள் வழக்கமான சாதாரண அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்ல.
இந்த வார்த்தையின் இரண்டாவது பொருள் 2. மக்கள் தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுவதைக்குறிப்பது. இது சாதாரண போதனையல்ல. இயேசு பலமுறை மக்களுக்குப் போதித்திருக்கிறார். இந்தப் போதனையை சாதாரண போதனையோடு நாம் ஒப்பிடக்கூடாது. 

இது அதைவிட மேலானது. தனது உள்ளத்தின் ஆழக்கிடங்கை இயேசு வெளிப்படுத்துகிறார். இயேசுவை நேர்மையான உள்ளத்தோடு பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும், இதுதான் வாழ்வின் மையமாக இருக்க வேண்டும், என்கிற ஆதங்கத்தோடு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள்.

 நாம் பொதுவாகப் பேசுவதற்கும், முக்கிய கூட்டத்தில் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டிற்குமே ”பேசுதல்” என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். அதுபோலத்தான், மத்தேயு தனது வார்த்தைகளை தனி அர்த்ததோடு பயன்படுத்துகிறார். 

நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லா நேரத்திலும் ஒரே பொருளை தருவதில்லை. வார்த்தைகள் ஒன்றாக இருந்தாலும் அதன் அர்த்தங்கள் மாறுபடுகிறது. எனவே, வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்தில் நாம் எச்சரிக்கை உணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். .இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்த வேண்டும். 

புனிதர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? நினைவிலிருந்து சில பெயர்களைச் சொல்லச் சொன்னால், இருபது பெயர்களுக்குப் பிறகு யோசிக்கத் தொடங்கி விடுவோம். 

புனிதர்களின் பிரார்த்தனையில் ஏறக்குறைய 50 புனிதர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இணைய தளத்தில் நுழைந்து பார்த்தால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புனிதர்களின் பெயர்களைப் பார்க்கலாம். 

இவர்களெல்லாம் திருச்சபையால் புனிதர்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். உண்மையில், இறைத் திருவுளத்தின்படி வாழ்ந்து, இன்று விண்ணில் இறையின்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் என்னும் பார்வையில் பார்த்தால், இலட்சக்கணக்கான புனிதர்களை எண்ணலாம்.

இன்றைய நாளில் திருச்சபை அனைத்துப் புனிதர்களையும் நினைவுகூர்ந்து, இறைவனைப் போற்றுகிறது. நன்றி கூறுகிறது. பெயர் தெரிந்த, பெயர் தெரியாத அனைத்துப் புனிதர்களையும் இன்று எண்ணிப்பார்க்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். புனிதர்கள் என்பார் யார்? தங்களுடைய வாழ்வையும், பணியையும் இறைவனின் விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொண்டவர்கள்தான் புனிதர்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்கும் மலைப்பொழிவைத் தம் வாழ்வாக்கிய அனைவருமே புனிதர்கள்தான். இந்த நாள் நமக்கு விடுக்கும் அழைப்பு: நாமும் புனிதராக வாழவேண்டும். புனித வாழ்வை விரும்ப வேண்டும். 

புனிதர்கள் என்பவர்கள் நமக்கு அப்பாற்பட்டவர்கள், வியத்தகு வரங்களைப் பெற்றவர்கள் என்று எண்ணாமல், அவர்களும் நம்மைப் போன்ற நிறைகளும், குறைகளும் கொண்டவர்களே என்பதையும், ஆனால், நாள்தோறும் தங்கள் வாழ்வை இறைவார்த்தையின்படி நடத்தியவர்கள் என்பதையும் நினைவுகூர்ந்தால், நாமும் புனிதர்களாக வாழலாம், முயற்சி செய்யலாம்.


Friday 30 October 2015

முதலிடம்!



''இயேசு, 'தம்மைத்தாமே உயர்த்துவோர் எவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்றார்''(லூக்கா 14:11).


 இயேசு எப்போதுமே வெறும் போதனையோடு நின்றுவிடுவதில்லை.   போதிப்பதை வாழ்ந்து காட்டக்கூடியவர். நாளைய  நற்செய்தியிலும், அப்படிப்பட்ட தான் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கக்கூடிய போதனையை, அவர் மக்களுக்கு அறிவிக்கிறார். 

அதுதான் தாழ்ச்சி. தாழ்ச்சியைப்பற்றி இயேசுவைத்தவிர சிறப்பாக எவரும் போதித்துவிட முடியாது. அந்த அளவுக்கு, தாழ்ச்சியே உருவானவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நாம் ஒவ்வொருவருமே இந்த தாழ்ச்சி என்னும் அணிகலனை அணிய வேண்டும் என்பது தான், இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

நாம் எப்படி தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ முடியும்? எப்போது தாழ்ச்சி நம்முள் மேலோங்கியிருக்கும் என்று பார்ப்போம். தாழ்ச்சி என்னும் அணிகலனை நாம் அடைய, நமது எண்ணத்தை சீர்படுத்த வேண்டும். அதனை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் எவ்வளவுக்கு சாதித்திருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. 

நான் சாதித்தது ஒரு துளி தான், என்று, நமது எண்ணத்திற்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நமது எண்ணத்தை நாம் பொருட்டாக நினைக்காது, அதனை அதன் போக்கில் விட்டுவிட்டால், அது தனக்குள்ளாக கர்வம் என்னும் கோட்டையைக் கட்டிவிடும். 

அந்த கர்வம் இல்லாமல், எப்போதும், நமது எண்ணத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது, நாம் தாழ்ச்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்போம். நமது வாழ்வும் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்கும்.

இன்றைக்கு, ஒரு சிறிய வெற்றி ஒருவருக்கு கிடைத்தாலே, இந்த உலகமே தன்னால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது போல, ஒரு சிலருக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அந்த எண்ணத்தை அகற்றிவிட்டு, இந்த உலகத்தில், இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில், நாம் ஒரு சிறிய துகள் என்கிற அந்த மனப்பான்மையை பெறுவோம்.

இயேசுவின் ”செயல்வழிக் கற்றல் ” முறை இன்றும் தொடர்கிறது. உணவு அருந்தும் வேளையைப் பயன்படுத்தி இயேசு நல்ல மதிப்பீடுகளை மக்களுக்குக் கற்றுத் தருகிறார். குறிப்பாக, இயேசுவின் சீடர்கள் முதன்மையான இடத்தையும், மதிப்பையும் விரும்பித் தேட வேண்டாம் என்று அறிவுரை பகர்கின்றார். அதற்காக நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் தருகிறார்.

விருந்துக்கு செல்லும்போது விருந்தளிப்பவர் தருகின்ற மதிப்பைப் பற்றி இயேசு கூறுகின்ற எடுத்துக்காட்டு நமது வாழ்விலேகூட எப்போதேனும் நடந்திருக்கச்கூடிய ஒரு நிகழ்வுதான். 

நாம் முதன்மை இடத்தைத் தேடினால், அதை இழந்து பி;ன்னிடத்திற்கு செல்ல நேரிடும். கடைசி இடத்தைத் தேர்ந்தெடுத்தால், அனைவரின் முன்பாக மேலிடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பெருமைக்கு உள்ளாகியிருப்போம்.

ஆகவே, முதன்மை இடத்தை, பெருமையை, பாராட்டை பிறருக்கு விட்டுக்கொடுக்கின்ற நல்ல பழக்கத்தை ஒரு வாழ்வு மதிப்பீடாக ஏற்றுக்கொள்வோம். அப்போது, இறைவன் நம்மைப் பெருமைப்படுத்துவார்.

ஒரு மனிதனுடைய குணத்தை, பண்பாட்டை உணவு உண்ணும் இடத்தில் கண்டுகொள்ளலாம் என்பர். இங்கு மனிதன் இயல்பாக செயல்படுவதால் அவனுள் இருக்கும் உண்மை இயல்பை அறிந்து கொள்ளலாம்.

 அதிலும் விருந்துகள் வெறுமனே உணவுப் பறிமாற்றம் மட்டும் அல்ல. அதனுள் பல மனித நேய உண்மைகள், இறை உணர்வுகளும் அடங்கியிருக்கின்றன. இவை மனித வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதையே இயேசு இங்கே உணர்த்துகிறார்.

விருந்தில் முதலிடத்தைத் தேடும்போது தன்னைப்பற்றியும் நினைக்கவில்லை, அடுத்திருப்பவனைப்பற்றியும் எண்ணமில்லை. மனித நேயமும் இல்லை, இறை உணர்வும் இல்லை. உணவை மட்டுமே எண்ணமாக இருப்பது மனித நிலை தாழ்ந்த ஒரு பிறவி.

ஒவ்வொரு விருந்தும் மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பு. தெய்வீகத்தன்மையை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பு. எனவேதான் நற்கருணை அருட்சாதனத்தை விருந்துச் சூழலில் ஏற்படுத்துகிறார். 

எந்த வீட்டிற்கு விருந்துக்குச் சென்றாலும் அங்கு வந்திருக்கும் நோயுற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் குணமாக்குகிறார். முதலில் அவர்களின் மனச்சுமையை இறக்கி வைக்கிறார். பாதங்களைக் கழுவுகிறார்.

இயேசுவின் போதனையை கருத்தூன்றிக் கேட்டு அவர் செயல்பட்டதுபோல நாமும் வாழ்ந்தால் முதலிடம் நம்மைத் தேடி வரும்.

நாளையுடன் (31.10.2015) இந்த மாதம் முடிகிறது.ஜெபமாலை அன்னையின் அருள் நம்முள் என்றும் தங்கட்டும்.அன்னைக்கு கரம் கூப்பி மலர் தூவி நன்றிகள்.மரியே வாழ்க ! 


9 Ways You Can Instantly Change Your Life

It’s never too late to change.
Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending. -Maria Robinson


9 Ways You Can Instantly Change Your Life:

1. Remove the Non-Essential
We as humans easily get wrapped up in unimportant things. These things initially start off as ways to pass time but eventually they have the potential to consume us. A good example of such a thing could be watching television; initially it’s all fun and good but before you know it you’re spending hours and hours of your life while you could be doing better things.
So to create positive change, try to simplify your life. Remove or limit all unessential things and focus on what’s truly important.

2. Focus on One Task at a Time
If someone tells you that it’s possible to multitask, they are lying. Human beings are capable of doing only one thing at a time, so when people claim to be multitasking   they are simply going back forth from one task to the other.
So what does that mean? Don’t waste your energy pretending to multitask. Focus on one thing, one goal at a time and work with nature rather than against it.
By creating this change in your perspective, you will find that you are less stressed when it comes to completing tasks and that you will complete them more successfully.

3. Become Mentally and Physically Clean
Purity of the mind and body is the backbone to a successful life .
How to be Mentally Clean:
  • Remove all negative thoughts
  • Be Optimistic
  • Learn how to uncluttered your mind and be at peace with yourself
How to be Physically Clean:
  • Shower daily
  • Wear clean clothes
  • Maintain good hygiene


 4. Overcome a Bad Habit
By overcoming a bad habit, you will allow yourself to reach your true potential. So don’t just let this bad habit weigh you down, change for the better and do something about it.
First we form habits, and then they form us. Conquer your bad habits or they will conquer you. -Rob Gilbert quotes.

5. Give Generously
If you choose to make only one change from this entire list, try to make it this one. Generous giving is the most beneficial thing a person can do for themselves.  Why you might ask?
A couple powerful reasons:
  • Giving leads to receiving; by giving you get in return a sense of happiness,      content, peace and positivity.
  • Giving creates a strong protective aura around you that saves you from many dangers

6. Feel and Radiate Positivity
This one change is so vital that it will impact every aspect of your life. Positivity is a habit that if developed can make a person more successful, more content, and more at peace.
The positive thinker sees the invisible, feels the intangible, and achieves the impossible.

7. Kindness & Compassion
Make it a daily habit to shower kindness and compassion on everybody, as this quick and easy change will drastically make your life better. You will notice that people will treat you better; you will feel more loved and you will feel better about yourself.
As for developing a kind personality, it’s not that hard but it takes a certain level of commitment. Try to take it one person at a time rather than looking at the big picture and before you know it, you will automatically develop this habit.

8. Set Goals and Accomplish Them
Living a life without goals is like shooting an arrow without a target in mind; it’s of no use. So incorporate this change in everything you do. Make goals no matter how small and aim to accomplish them.
This constant goal setting will create a drive in your life and will over time eventually make you very successful.   
9. Be Thankful
If you can include this one change in your life, I guarantee you your life will get a lot better. Every day of your life, always try to take a moment to reflect and be grateful.
Ponder and think about:
  • What you’re fortunate to have…
  • What you’re fortunate to not have…
  • What you’re glad to have experienced…
  • What you’re glad to have not experienced..
Be thankful for what you have; you’ll end up having more. If you concentrate on what you don’t have, you will never, ever have enough. -Oprah Winfrey




Thursday 29 October 2015

கரம் பிடித்து


''இயேசு அவர்களை நோக்கி, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில்; விழுந்தால்
ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?' என்று கேட்டார்.
அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக்கா 14:5-6).

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல்”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.

மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர்.

இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார்.

ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார்.

 நலப்படுத்திய தனது செயலையும் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சிலும், செயலிலும் உள்ள நியாயத்தை உணர்ந்த அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது.

நிறைய நேரங்களில் நாம் பிறரை நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சட்டம் பேசியே  போட்டே நேரத்தை கழித்துவிட்டோம் .பேச்சு மட்டுமே நம்மிடம்  இருக்கும் . செயல் இருக்காது. ஆனால் இயேசுவை பாருங்கள் எப்படி செயல்வழி கற்பித்தலை அழகாக செயல்படுத்துகிறார்.
 
இயேசுநாதர் எந்த கல்லூரியும் செல்லவில்லை.எந்த பழைய சிலபசும் தெரியாது.புதிய சிலபசும் தெரியாது.அவருக்கு தெரிந்தது எல்லாமே தந்தையின் திருவுளம்  நிறைவேற்ற வேண்டும் என்ற சிலபஸ் மட்டும் தான்.  

இந்த  ப்ராக்டிக்களை(செயல்வழி கற்ப்பித்தலை)   தொடங்க தவளை, கரப்பான்பூச்சி கத்தரிக்கோல் எல்லாம் தேவை இல்லை.நல்ல தாரளமுள்ள மனமும் அன்பும் இருந்தால் போதும்.  
   
  ஆக, நாம் பிறருக்குப் போதிக்க விரும்பும் நல்ல மதிப்பீடுகளை நாம் கடைப்பிடித்து, அதன்வழி செயல்வழிக் கற்பித்தலை நாமும் செயல்படுத்தலாமே. 

இயேசுவை போன்று துன்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் கரம்பிடித்து தூக்கி விடலாமே.
 

நாளை(30.10.2015) பிறந்த நாளை கொண்டாடும் என் கரம் பற்றி வழிநடத்திய  ஞானத்தந்தை அருட்  தந்தை பெனெடிக்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .