Monday 26 October 2015

வாழ்ந்து காட்டுங்கள்!

   இருவரோ அல்லது இருதரபினரோ, காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது, இடையே 'என்னைப் பற்றி உனக்கு தெரியாது. கூடிய சீக்கிரத்திலே நான் யார் என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்...' என்று சபதம் செய்வதையும் சவால் விடுவதையும் பார்த்திருக்கலாம்; இருவருக்குமிடைய நடைபெறும் மனப்போராட்டத்தில் வெடிக்கும் வார்த்தைகள்தான் இவைகள்.
          இதை நான் செய்து காட்டுகிறேனா இல்லையா பார் என்று மனதால் தீவிரமாக எண்ணுவதை சபதம்,சவால் எனலாம். வைராகியத்துடன் செய்கின்ற முடிவு அது. அதே வைராகியத்துடன் செய்து முடிபவர்களும் உண்டு. வாழ்க்கைக்கு இந்த வைராக்கியம் மிகமிக அவசியம். வைராக்கியத்துடன் முடிவெடுத்தபின், எந்த காரணம் கொண்டும் பின்வாங்கமாட்டார்கள். அவர்கள்தான் சாதனையாளர்கள்.
          தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அழைப்பின் பேரில், கதாசிரியர் ஒருவர் அங்கு சென்று வரவேற்பு அறையில் காத்திருந்தார். அருகே ஒரு பெண்மணி சற்றுக் கோபமாக இருபதைபோல காணப்பட்டாள். கதாசிரியர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளுடன் பேச்சுக் கொடுத்தார். 'தொடர் ஒன்றில் நடிப்பதற்கு வரும்படி அழைப்புவிட்டு, வந்தபின் வேண்டாம் என்கிறார்கள்' என்று தன் கோபத்தைக் கொட்டித்தீர்த்தாள். அவளது கோபம் நியாயமனாதகவே தோன்றியது. ஒரு நாளைக்கு இந்த ஸ்டூடியோவையே விலை கொடுத்து வாங்குகிறேனா  இல்லையா பார்..." என்றாள் , அந்த பெண்மணி . இன்னும் கோபம் தணியவில்லை போலும் என்றெண்ணினார் கதாசிரியர்.
          இரண்டு, முன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஸ்டூடியோவிற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது,  அந்த காதசிரியருக்கு  அங்கு சென்று அந்த பெயர் பலகையை பார்த்ததும் ஆச்சரியமானது  அவருக்கு  அந்த பெண்மணியின் பெயறும் கிழே  உரிமையாளர் என்றும் இருந்தது. அன்று அவள் சவால் விட்டபடியே அந்த ஸ்டூடியோவையே விலை கொடுத்து வாங்கிருந்தால் அதுமட்டுமல்ல, தொலைக்காட்சி  ஸ்டூடியோவின் முதல் பெண் டைக்டரும்  அவள்தான். அவள்தான் பின்னாளில் பிரபல ஹாலிவுட்  நடிகையாக  விளங்கிய லூசிலிபால் (Lucilli Ball) என்பவள் . இதுதான் சபதம், சவால்  என்பது. இது ஒரு உன்மைச் சம்பவம்.
          பிரபல பேச்சாளர் , எழுத்தாளர் சிறந்த சிந்தனையாளர், வலம்புரி ஜான் அவர்கள், ஒருமுறை தனக்கேற்பட்ட அனுபவத்தை கூட்டம்  ஒன்றில் எடுத்துச் சொன்னார். சிந்தனையை கிளர்க் கூடிய அதை அவர் வாயிலாகவே கேட்போம்.
          ஆரம்ப காலத்தில் , சிறுகதை ஒன்றை எழுதி  அதை  கொண்டுபோய் பத்திரிகை ஆசிரியரிடம் கொடுக்கச்  சென்றான். அவர் நிமிர்ந்து பார்பதற்கே  இரண்டு, மூன்று  நிமிடங்கள் ஆகின. பிறகு, என்னவென்றார்.  சிறுகதை ஓன்று கொண்டு வந்திருக்கிறேன் என்றேன். சிறுகதையா அப்படி வை என்று கண்ணாலேயே மேஜையை  ஜாடை  காட்டினார்.  மேஜை மீது வைத்துவிட்டு வந்துவிட்டேன்.    சிறுகதையா அப்படி வை என்று கண்ணாலேயே மேஜையை  ஜாடை  காட்டினார்.  மேஜை மீது வைத்துவிட்டு வந்துவிட் டேன்.  அடுத்து இரண்டு, மூன்று  இதழ்களிலும் அந்த கதை பிரசுரமாகவில்லை. பிறகு நேரில் சென்று ஆசிரியரை சந்தித்து விவரம் கேட்டபோது  'போட்டுவிட்டேனே' என்றார்.  கடந்த    இரண்டு, மூன்று  இதழ்களையும் பார்த்தேன். அதில் வெளிவரவில்லை. எங்கே போட்டீர்கள்? எப்பொழுது  போட்டீர்கள்?  என்றேன்.    தயக்கத்துடன், 'குப்பைத் தொட்டியில் ' என்றார். எனக்கு வந்த கோபத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு , "மகனே, கூடிய சிக்கிரதிலேயே, நான் யார்  என்பதை உனக்கு நிருபித்துக் காட்டுகிறேன் ' என்று மனதிற்குள்ளேயே சபதம் செய்துகொண்டு, அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன்.   பிறகு தீவிரமாக முயற்சித்து, மேடைகளில் பேச ஆரம்பித்தன. சுமார் இர்ண்டண்டுகளுகுப்பின், ஒரு நாள், காலை நேரம். உங்களைத் தேடிக்கொண்டு  யாரோ ஒருவர் வந்திருக்கிறார் என்றால் மனைவி. போய்ப் பார்த்தபோது, வந்திருந்தவர், அந்த பத்திரிகை ஆசிரியர். என் நண்பர் ஒருவர் எழுதிய  நூலுக்கு, நான் முன்னுரை ஓன்று எழுதினால் புத்தகம் நன்றாக விற்பனையாகும் அதனால் வந்திருக்கிறேன்  என்றார். புத்தகத்தை கையில் வாங்கிக் கெண்டு, என்னை நினைவிருக்கிறதா என்றேன். பதில் பேசாமல், தலைகுனிந்து நின்றிருந்தார், அந்த பத்திரிகையாசிரியர்.  இது தொடர்பாக, இளைர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பொன்னான ஓர் அறிவுரையை   கூறிவிட்டு சென்றுள்ளார் , வலம்புரி ஜான் அவர்கள்,  அதையும் அவர் செல்லக் கேட்போம்.
          யாரேனும் உங்களை இழிவாகவோ, கேலியாகவோ பேசினால், கோபப்படாதீர்கள்; ஆத்திரப்படாதீர்கள்; அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஒருபோதும் எண்ணாதீர்கள் . அந்த நிமிடம் முதல், அவர்களது வார்த்தையை பொய்யாக்கும் வகையில், உழைத்து  நீங்கள்  யார் என்பதை நிரூபிக்க வேண்டும். அது உங்களால் முடியும். அவர்கள் உங்களைத் தேடிவந்து, உங்கள் வீட்டு வாசற்படியில் காத்திருக்கச் செயுங்கள். அதுதான் நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை. ஒன்றல்ல, இரண்டல்ல, இது போன்ற பல அனுபவங்களை  என் வாழ்நாளில்  பெற்றிருக்கிறேன் . அவையனைத்திலும்  நான் கடைபிடித்த முறை இதுதான்..." என்கிறார்., வலம்புரி ஜான்.
          முயற்சி முக்கியம்; வைராக்கியம் அவசியம்; உன்னால் முடியும்  என்று நம்பு; நிசயம் உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பது அவர்கள் வாதம். பெரும்பாலான தோல்விக்கான கரணம், விடாமுயற்சியும்  வைராக்கியமும் இல்லாமையேயாகும். வலம்புரிஜான் கூறியதை அப்படியே பின்பற்றி வாழ்ந்து காட்டியதைப் போல அமெரிக்க பெண்மணியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம். அமெரிக்காவில் ஒரு இளம் பெண்மணி அவளுக்கு மூன்று வயது, ஐந்து வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள். கணவன் கைவிட்டுவிட்டு காணாமல் போய் விட்டான்.சிரம்மப்பட்டு வாழ்க்கை நடத்தி வந்த போதிலும் , ஒரு காலகட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப் போய், இரயில் வரும் வரை காத்திருந்தாள்.அப்போது மூறு வயது சிறுமி "அம்மா குளிருது வாம்மா வீட்டுக்கு போகலாம் " என்றது .திரும்பி , அந்தப் பிஞ்சு முகத்தையும், கெஞ்சும் குரலையும் பார்த்ததும், கேட்டதும் அவர்களை கொல்ல அவளுக்கு மனம் வரவில்லை .இருவரையும் அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு, கண்ணீர் வடித்த வண்ணம் வீடு வந்து சேர்ந்தாள்.'நான் ஏன் சாக வேண்டும்?இந்த இரண்டு குழந்தைகளுக்காகவாவது , நான் வாழ்ந்து காட்டுகிறேன் பார்' என்று மனதிற்குள்ளேயே சபதம் செய்து கொண்டாள்.
         
          அவளிடமிருந்து ஒரே ஒரு திறமை, அவளுக்கு சற்று  பாடவரும். பாடகியாக வேண்டுமென்ற  விருப்பமும் கூட. அன்று முதல் தினமும், பாட பழகலானாள். இதற்கிடையே ஒரு நாள், வியன்னாவின் பிரபல கலை அரங்கத்தின்  சொந்தக்காரர் ஒருவரின் அறிமுகம் ஏற்ப்பட்ட போது, அவர் முன்னிலையில் பாடிக் காட்டினாள். அவர் பாட்டைக்  கேட்டுவிட்டு, உன்னிடம் அழகும் இல்லை; குரலும் இல்லை; நீ பாடுவதை மறந்து விட்டு, தையல் மெஷின்  ஒன்று  வாங்கி பிளைதுகோல் என்றார். அதைக் கேட்டதும் தன் கோபத்தை  அடக்கிக் கொண்டு , "  தையல்  மெஸின  வாங்கச் சொன்னாய், நீயே ஒரு நாள் எனக்கு அழைப்பு விடுத்து, என்னை உங்களது  அரங்கில் வந்து பாடும்படி  கேட்க  வைக்கிறேனா  இல்லையா  பார்'  என்று மனதிற்குள்ளே சபதம் செய்து கொண்டாள்.  அன்று முதல் தீவிரமாக முயற்சியும், பயிற்சியும்  செய்துவரலானாள். மெதுமெதுவாக  அமெரிக்காவின்  பல்வேறு  மகாணங்களில்  பிரபலமாகி வந்தாள். பிறகு வெளிநாடு செல்லும் வாய்ப்பும்  அவளைத் தேடி வந்தது. அப்படி ஒருமுறை  சென்ற போது, வியன்னாவில் வேறொரு  அரங்கில் பாடி முடித்து விட்டு, மேடையை  விட்டு கீழே இறங்கியதும், அங்கே ஒருவர், உங்கள் இசை பிரமாதம்; எங்களது அரங்கில் ஒருமுறை  நீங்கள் வந்து பாட வேண்டும்; இது எனது வேண்டுகோள்  என்று சொல்லிவிட்டு , உங்களை எங்கோ பார்த்த ஞாபகம்  என்றார். பாடகியால் அவரை மறக்க முடியுமா ? அவர்தான் வியன்னா அரங்கின் சொந்தக்காரர். "தையல் மெசின்  ஒன்று வாங்கிப் பிழைத்துக் கொள் என்று  சொன்னீர்களே! அதாவது நினைவிருக்கிறதா " என்றாள். உடனே நினைவுக்கு வந்து , ஆச்சரியத்தாலும், வெட்கத்தாலும்  தலைகுனிந்து நின்றிருந்தார் .
          சாதாரண மக்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவரது வாழ்க்கையில், எப்போதேனும் ஒருமுறை இது போன்ற  சந்தர்ப்பம்  ஏற்பட்டிருக்கக்  கூடும். சாதனையாளர்கள் இதையெல்லாம்  காதில் வாங்கி கொள்வதில்லை.; சபதம் செய்வதில்லை; சவால் விடுவதில்லை; அமைதியாக சாதித்துக் காட்டினார்கள். விரண்டாவாதம் பேசியவர்களை எல்லாம் வியக்க வைத்தார்கள். நீங்கள் எந்த காரணம் கொண்டும், உங்களை தாழ்வாக மதிப்பு இடாதிர்கள். மற்றவர்களையும் அப்படிச் செய்ய  அனுமதிக்காதீர்கள். உண்மையில் நீங்கள் ஒரு உயர்ந்த மனிதன். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.; விரும்பியதை பெற முடியும். எதிர்பார்த்ததை அடைய முடியும். நம்புங்கள்! நம்புங்கள்!  வைராக்கியத்துடன்  வாழ்ந்து காட்டுங்கள்! வெற்றி உங்கள் பக்கம். வாழ்க வளமுடன்!.


2 comments: