Friday 23 October 2015

திருந்துவதே நல் வாழ்வு

"சிலர் இயேசுவிடம் வந்து, 'பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.
"இயேசு அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள்
மற்றெல்லாக் கலிலேயரை விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா' என்று கேட்டார்'' (லூக்கா 13:1-2).

நாளைய நற்செitய்தியை பார்த்தோம் என்றால் இதுதான் நான் என்பதை கடவுள் தன மகன் இயேசு மூலம் வெளிபடுத்துகிறார். 

குற்றம் செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு பொதுத் தத்துவமாகக் கொண்டிருப்போர் பலர். அதுபோலவே, பாவம் செய்தால் அதற்குத் தண்டனையைக் கடவுள் கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை கொண்டோர் பலரின் கருத்து. நில நடுக்கம், சூறாவளிக் காற்று, நிலச் சரிவு, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்ற மக்கள் பாவம் செய்ததால் தண்டிக்கப்படுகிறார்களா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். 

இயேசு வாழ்ந்த காலத்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்தது. பிறவியிலேயே பார்வை இழந்து பிறந்த ஒருவருக்கு இயேசு மீண்டும் பார்வை வழங்கியபோது அவரிடமும் இக்கேள்விதான் கேட்கப்பட்டது. ''ரபி, அவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?'' என்று கேட்டவர்களுக்கு இயேசு அம்மனிதர் பார்வையற்றவராகப் பிறக்க யார் பாவமும் காரணமாக இருக்கவில்லை என்ற பதிலளித்தார் (காண்க: யோவா 9:1-3). அதே கருத்தை விளக்குகின்ற இன்னொரு நிகழ்ச்சியை லூக்கா பதிவு செய்துள்ளார். 

பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்னும் செய்தியைக் கேட்ட இயேசு, அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மற்ற கலிலேயரை விடப் பாவிகள் எனக் கூறுவது சரியல்ல என்று கற்பிக்கிறார் (காண்க: லூக் 13:1-2). பிலாத்து கலிலேயரைக் கொன்ற நிகழ்ச்சி வேறு எந்த வரலாற்று ஆதாரத்திலும் காணப்படவில்லை. என்றாலும் அவன் உண்மையிலேயே கொடியவன் என்பதற்கு வேறு பல நிகழ்ச்சிகள் ஆதாரமாக உள்ளன.

பிறருக்குத் துன்பங்கள் ஏற்படும்போது அவர்கள் பாவம் செய்ததால்தான் அவ்வாறு துன்புறுகின்றனர் என நாம் முடிவு செய்வது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இதனால் பாவத்தின் விளைவாக யாதொரு துன்பமும் ஏற்படாது என நாம் முடிவுசெய்துவிடலாகாது. 

சில வேளைகளில் நாம் செய்கின்ற தவறான செயல்களின் விளைவாக நமக்கோ பிறருக்கோ துன்பம் ஏற்படுவது இயல்பு. எனவே தவறான நடத்தையை நாம் விலக்க வேண்டும் என்னும் முடிவுக்கு நாம் வந்தால் அது சரியானதே. ஆனால் பிறருக்கு ஏற்படும் துன்பங்கள் அவர்கள் பாவம் செய்ததின் விளைவே என நாம் முடிவுசெய்வதோ, அந்த முடிவின் அடிப்படையில் அவர்களை இழிவாக நோக்குவதே கிறிஸ்தவ மனப்பான்மைக்கு எதிரான ஒன்று. 

துன்பம் ஏன் வருகிறது? என்பதற்கு நம்மால் முழுமையான பதில் காண்பது இயலாது. ஆனால் குற்றமற்றவராக இருந்த இயேசுவே நமக்காத் துன்பங்களை ஏற்றார் என்பது நமக்கு ஆறுதலாக அமைய வேண்டும். இயேசுவைப் போல நாமும் துன்பங்கள் வழியாக நன்மை நிகழ வழியாக மாறிட வேண்டும். பிறருடைய துன்பங்களைக் கண்டு அவர்களுக்கு ஆறுதலளிப்பதற்கு மாறாக, அவர்கள் மேல் குற்றம் சாட்டுகின்ற மனப்பான்மை நம்மிலிருந்து மறைய வேண்டும்.

"பண்ணின அநியாயத்திற்கு இப்ப வாங்கி கட்டிக்கொள்கிறான்" இது பிறரைப்பற்றி பலர் சொல்லும் புரளி. ஆனால் இத்தகையோர் தன்னிலை உணர்வதில்லை. ஒருவனைப் பிடிக்கவில்;லை என்றால் ஊதிப்பெருக்கி உலை வைத்துவிடுவர்.

இப்படித்தான் கலிலேய யூதரைப் பிடிக்காத எருசலேம் யூதர்கள் இயேசுவிடம் வந்து, "பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான். இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?" என்று வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்சியை சுட்டிக்காட்டி கேட்டனர்.

இதற்கு மறுமொழியாக இயேசுவும்; இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியை மேற்கோளாகக் காட்டுகிறார்.
யோவா 5'2-3 , நெகே 3'15ல் சொல்லப்படுகின்ற குளத்தின் மண்டபத்தின் கோபுரம் விழுந்து 18 பேர் இறந்தார்களே, அவர்களும் பாவிகளா என்று குருக்குக் கேள்வி கேட்கிறார்.

அடுத்தவனைப்பற்றி பேசும்போது அவனது பெருமை, திறமை, நன்மைகளைப் பேசு. உன்னைப்பற்றி பேசும்போது உன் பலவீனங்கள், தவறுகள், குறைகளை மனதில் கொள். இரண்டையும் செய்யும்முன் இறைவனை உன் முன் நிறுத்திக்கொள். இயேசு சொன்ன சொற்கள்,எல்லோரும் பாவிகள், எல்லோரும்; குற்றவாளிகள். மனமாற்றம் பெறுதலே அழிவிலிருந்து காத்துக்கொள்ள சிறந்த வழி.

அன்னையின் அருள் என்றும் நம்முடன் இருப்பதாக!தொடர்ந்து ஜெபிப்போம் ஜெபமாலையை பல இன்னல்கள் அகல!   


4 comments:

  1. Dear Akka Today 's Gospel Message is very god and meaningful . It inspired me lot. thank you very much Akka.

    ReplyDelete
  2. Dear Akka Today 's Gospel Message is very god and meaningful . It inspired me lot. thank you very much Akka.

    ReplyDelete
  3. IMPORTANT MESSAGE FOR SINNERS............FOR ME ALSO.....THANK U SISTER

    ReplyDelete