கை எடுத்து வணங்குகிறேன் !
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் !
உயிர் ஈந்த நம்மில் உயர்ந்த இறைவனுக்கும்!
உடல் ஈந்த என்னருமை பெற்றோருக்கும்!
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அழைக்கப்பட்டு இறைபணியை ஆற்ற
என்னை உருவாக்கிய என் டி.எம் .ஐ குடும்பத்தாருக்கும் !
கலைமகளை அறிவுமகளாய் மாற்றிய என் ஆசான் யேசு கருணாநிதிக்கும் !
கரம் பற்றி வழி நடத்தும் ஞான தந்தையர்கள் அருட்பணி. பெஞ்சமின்,அருட்பணி.பெனெடிக்ட்,அருட்பணி.அலெக்ஸ்
கிளமென்ட்,அருட்பணி.ஆரோக்கிய தாஸ் அண்ணன் போன்ற அருட்தந்தையர்களுக்கும் ! மற்றும் குடும்ப்பத்தார்
என் அண்ணன் மகிழ் ,அண்ணி ஜேன் ,அக்கா,தங்கை ராஜி ஆகிய உறவுக்கும்!
காவியா, ஜியானா, பிலோ, கார்த்திகா,ஆண்டோ,விஜய்,சரண்யா ,சத்யா
ஆகிய முத்துக்களாகிய குழந்தைகளுக்கும்!
தடையின்றி என் எழுத்தில் வரும் தங்கத் தமிழுக்கும்!
கண்ணீர் கண்டு கண் துடைக்கும் தோழி அருட்சகோதரி ஆரோ என்ற ஆரோக்கிய
மேரிக்கும் – என்
கிறுக்கல்களை முத்தமிடும் உங்கள் கண்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்!!
வார்த்தைகளை அல்ல ....
சிதறல்களை.
குரு(யேசு)வே !
பதிவை வைத்து உங்களை அறிந்தேன்!
உங்களை வைத்து பதிவை படித்தேன்!
பதிவை வைத்து உங்களை நினைத்தேன்!
உங்களால் இந்த வலைப்பதிவை படைத்தேன் -
இனியும் படைப்பேன்!
நான் வளர ! என் திறமையை வெளிக்கொணர ! - நான் மாணவர்களுக்காகவும்,இளைஞர்களுக்காகவும்
பதிவை படைக்க
என்னில் ஒளியேற்றினீர் !
நான் இன்று இன்பம் காண
அன்று என்னில் உற்சாகத்தை அளித்தீர் - என்றும்
எனக்கு உற்சாகத்தை அளிப்பீர் - ஆகவே , நீர் என்றும்
இறைவன் துணையோடு சீரும் சிறப்புமாக வாழ இறைபணியை செவ்வனே ஆற்றிட இறைவனிடம்
வேண்டும் அருட்ச்சகோதரி !
இந்த ஒரு வார காலமாக இறைகரம் என்னை வழிநடத்தியதற்கும் என்றும் இறை வழி
நடந்து நற்பணி புரிய அருள் வேண்டி பதிவை தொடர எனக்கு உறுதுணையாக இருக்க இறைவனையும்
,அன்னை மரியாளையும், வேண்டுகிறேன் .
என் குரு அருட்பணி ஏசுவை நன்றியுடன் நினைத்து பார்கின்றேன்.
என் குரு அருட்பணி ஏசுவை நன்றியுடன் நினைத்து பார்கின்றேன்.
பதிவை தொடர சமர்ப்பிக்கின்றேன் இந்த சமர்ப்பணத்தை.
No comments:
Post a Comment