Tuesday, 20 October 2015

குன்றென நிமிர்ந்து நில்!

உலகில் மிக சிறந்த வரம் எது?
மனித உருவெடுத்து , எவ்வித உடர்குறையும் இன்றி முழுமையாகப் பிறப்பது , என்கிறார் ஔவைப் பாட்டி. அவ்வாறு பிறந்த மனித குளம் தாமே தமது உயிரை மாய்த்துக் கொள்வது  இயற்கைக்கும் , மனித அறத்திற்கும் எதிரான செயலாகாதா? சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளோம்.
இன்று பல பெரிய பொறுப்பில் இருப்போர், கலை துறையில் உச்சம் கண்டோர், உளவுத் தொழிலில் உள்ளோர், மாணவர் பருவத்தில் பரிதவிப்போர் என்றாக பல்துறை மனிதர்களும் சிக்கலுக்கு "உள்ளாக்கும் போதோ/ உள்ளாகும் போதோ ",தங்களின் பெறற்கரிய உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலத்தை அறிந்துற முடிகின்றது. இந்த துயர முடிவு நிலையை முடிவுக்கு கொண்டு வருவது எப்போது ? என்று அனைத்து கருணை நெஞ்சங்களும் ஏங்குவது கண்கூடு.
இயலக்குடியதா ? எவரும் தங்களின் உயிரை எதற்காகவும், எந்த நிலையிலும் , தங்களளவில் மாய்த்துக் கொள்ளாத பெருமித நிலை அமைந்துறுமா?
ஏன் முடியாது ? மனித குலத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை என்பது தான் சான்றோர்களின் சரியாத வாக்கு.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் திருவள்ளுவர் திருத்தமாக கூறும் உர வாக்கு அதாவது செயலின் உறுதி என்பது மனதின் உறுதியில் மட்டுமே உள்ளது .மனதின் உறுதிக் கொண்டு எத்தகைய செயலையும் ஆற்றுவது என்பது இயலக்கூடியது என்பது மனித சிக்கல்களை தீர்ப்பதற்காக தந்துள்ள "தீர்வு நிலை வரைவு" எனக் கருத முடிகின்றது.
இன்று பல பட்டங்களையும் பல அறிவியல் நிலை உச்சங்களையும் இளைய தலை முறையினரின் அறிவிற்கு உட்படுத்தி உன்னதத்திற்கு உட்படுத்தும் அரசினர், ஏன்? மனித உளவியலின் உள்மன ஆற்றல்களை புலப்படுத்தி மனித வாழ்க்கையின் மாண்புகளை உணரச் செய்யக் கூடாது?
அறிவை சேகரிப்பது மட்டுமே கல்வியா?
செய்திகளை  அல்லது வரைவுகளை மனனம் செய்து வெளிப்படுத்தி முதன்மை காண்பது மட்டுமே கல்வியா? யாருக்குமே உதவாமல் தன்னலத்துடன் வாழ்வது மட்டுமே கல்வியா?
ஒரு சிக்கல் என்றால் அதனை நொறுக்காமல் அச்சிக்கலால் நொறுங்கி விடுவது கல்வியின் பயனா?
ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் துயரங்கள் முடிந்து விடுகின்றன என்று எந்த கல்வி முறை கற்றுத் தந்துள்ளது ?
இவ்வாறாக, நாம் பல வினாக்களை எழுப்பி , சிந்திக்க தொடங்கும் போது, நமக்கு பல தெளிவுகளும் பிறக்க ஏதுவாகின்றன .
கல்வி என்றால் என்ன? ஒன்றை கற்பது மட்டும் அல்ல கல்வி; கற்ற வழி நிற்பது மட்டுமே கல்வியின் விளைபயன் எனலாம். கல்வியின் முழுமை என்பது ஒருவன் தன்னுடைய ஒட்டுமொத்த திறனை / ஆற்றலை அறிந்து , அவ்வழி தனக்கும் , தான் பிறந்த நாட்டின் / உலகத்தின் வளர்ச்சிக்கும் /செழுமைக்கும் ஆக்கம் சேர்ப்பதாகும். அவ்வண்ணம் முறைப்படுத்த தவறிய எவருடைய கல்வி நிலையும் எள்ளத்தக்க நிலைக்கு தள்ளப் பெறுவது உறுதி .எனவே  ஒருவன்  தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கின்றான் என்றால், அவன் தன்னுடைய சுயமதிப்பை அறியாது , மாற்றாரின் "செயல் சுழலுக்குள்" சிக்கிக் கொண்டு சிதைந்து விட்டான்  என்று பொருளாகும்.எனவே ஒவ்வொருவரும்"நான் இந்த உலகில் பிறந்ததைவிட கூடுதல் திறன் உள்ளவன். உலகில் உள்ள எல்லா வலிமையும் சக்தியும் என்னுள் உறைந்துள்ளன" என  ஆழ் மனத்தின்வழி அசையாத நம்பிக்கையுடன் சொல்லத்தொடங்கும் போது உயிரின் உன்னத சக்தியானது புலப்படும் திறனை அறிய முடியும்.பின்பு தொடங்கப் பெறும் ஒவ்வொரு செயலும் , ஓர் அசாத்திய ஆற்றலுடன் செய்யப்பெறும் எளிநிலை என்பது இயல்பாகும் . மேலும்
1.       உலகில் உன்னதமான ஒன்றை பெறும் தகுதி எனக்குள்ளது.
2.       என்னை நான் உள்ளவாறே ஏற்றுக்கொள்கிறேன்.
3.       மற்றவரைப் போல் நானும் இந்த உலகில் முக்கியமானவன்.
4.       என்னை எவருடனும் தாழ்நிலையில் ஒப்பீடு செய்து கொள்ள மாட்டேன்.
5.       மற்றவரின் கணிப்பை விட என்னை பற்றி என் மீதான கணிப்பே சரியானது .
6.       மனச்சமன்மையுடன் வெற்றி மற்றும் தோல்வி என்ற இருநிலைகளையும் ஏற்பேன் .
7.       என் வாழ்க்கையை நிறைவாக வடிவமைக்கக் கூடிய வல்லலண்மை  எனக்குண்டு.
இவ்வாறாக சுயமதிப்புச் சார்பு  எண்ணங்களையும் / கருத்தாக்கங்களையும் வாழ்வியலாக்கும் பொழுது, எத்தகைய முரண்களையும், அரண்களாக்கக் கூடிய அளப்பரிய மனவாற்றல் நம்முள்ளே வெள்ளமென ஊற்றெடுப்பதை அறிய முடியும்.
இதனைத் தொடர்ந்து சாதனையாளர்களின் வரலாறுகளைப் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை தற்கொலைக்குத் தள்ளப் பெற்ற சிரிப்புச் சக்கரவர்த்தி சார்லின் சாப்ளின், தோல்விகளால் நிரந்பிய வாழ்க்கையில் மூழ்கிய உரமான லிங்கன், அசைக்க முடியாத பிரிட்டிஷ்  ஏகாதியபத்தியத்தால் பல இன்னல்களுக்கு ஆளான மகாத்மா , செக்கிழுத்த செம்மல் வ.வு.சி  போன்ற சான்றோர்கள் எல்லாம், எதிர்ப்புகளில் அல்லது அடக்குமுறைகளில் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளவில்லை. மாறாக, புடம் போட்ட தங்கமாக ஒளிர்ந்தனர்.; தங்களைச் சார்ந்தோரையும் ஒளிர்நிலைக்கு உட்படுத்தினார்.
எனவே அனைத்து எதிர்ப்புகளும், என்னைச் சோதிக்க வந்த நெருப்பு என்ற பார்வையில் ஒவ்வொருவரும் எதிர்ப்புகளை நேர்கொள்ளும் போது, தங்கம்மாக மிளிரத் தொடங்குவார்கள். இவ்விதமான  மாற்றுச் சிந்தனையும், அணுகுமுறையும் எதிரிகளின்பாழ் நோக்கிப் பொசுக்கி , தளராத தன்னம்பிக்கை மற்றும் தன்னை மேன்மேலும் வளர்த்துக் கொள்வதற்கான சக்தியைக் கொடுக்கும்.
இதுவும் கடந்து போகும் என்ற  மனப்பான்மையுடன்  இன்று " புதிதாய்ப் பிறந்தோம் " என்ற மகா கவியின்   தெய்வீக வாக்கை மனம்  கொண்டு செயல்பட  தொடங்குவோருக்கு தற்கொலை  செய்து  கொள்வது  என்ற நிலைக்கே சற்றும் இடமில்லை. எனவே, இனியாவது , அரசுகள், பள்ளி நிலையில் இருந்தே , மாணவர்க்கு உளவியல் நலன்களை  உள்ளம் படும்       வகையில் உணரச் செய்யும் கல்வி முறையை நடைமுறையாக வேண்டும்.  இனி இந்த உலகம் எந்நிலையுலும், " தற்கொலைகளுக்கு தள்ளபடாத  தரமுடை  மாந்தர்களை " மட்டுமே  உள்ளடக்கிய " திட்ப  புரியாகத்” ( strong willed society)  திகழ  வேண்டும்.



7 comments:

  1. It is very good Article and Thought provoking.

    ReplyDelete
  2. Very interesting one 4 d students and youth.....

    ReplyDelete
  3. It is wonderful an Best Article.

    ReplyDelete
  4. இந்த கட்டுரை தன்னம்பிக்கைக்கு துணிவூட்டுகிறது.

    ReplyDelete
  5. இந்த கட்டுரை தன்னம்பிக்கைக்கு துணிவூட்டுகிறது.

    ReplyDelete
  6. Its Very Useful to Students & Encourage to All the Youngsters

    ReplyDelete