Wednesday, 28 October 2015

குழந்தை உள்ளம்

"நீங்கள் மனம்திரும்பிச் சிறுபிள்ளைகளைப்போல்  ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" .மத்தேயு 18:3.
மத்தேயு நற்செய்தியில் வரும்  இந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்த  வார்த்தைகள் . இந்த வார்த்தைகளுக்கு எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும் மிகையாகாது.ஏனென்றால் அவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள்.எனவே கடவுளுக்கு நன்றி சொல்லி குழந்தை உள்ளம் பற்றி  பகிர விரும்புகிறேன்.

என் பிளாக்கின் பெயர் எல்லோருக்கும் எல்லாமாக.இந்த தலைப்பு தான் எனது நித்திய வார்தைபாட்டின் விருதுவாக்கு இதை நாம் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் அதிகாரம் 15 : 28 - ல் காணலாம்.

எல்லோருக்கும் எல்லாமாக கடவுள் விளங்கினார்.நான் இயேசுவை விசுவசித்து அடிபணிந்ததால் கடவுள் என் வாழ்வில் அனைத்திலும் அனைத்துமாய் இருந்தார்.
ஆக,  கடவுளை அன்பு செய்யும் ஒவ்வொருவருக்கும்  நான் எந்நிலையில் தள்ளப்பட்டாலும் அந்த நிலையில்  எல்லோருக்கும் எல்லாமாக இருக்க விரும்புகிறேன்

இந்த எல்லோருக்கும் எல்லாமாக என்ற  மனநிலை எப்பொழுது வரும் என்றால் நாம்  குழந்தையை போன்ற  மனநிலை கொண்டிருக்கும் போது என்றும் சொல்லலாம்.

நான் குழந்தை உள்ளம் என்ற பதிவில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் எப்போதுமே சந்தோசமா இருக்கிற இரண்டு பேரை சொல்லுங்கன்னா,நீங்க யாரை சொல்வீங்க? நீங்க யாரை சொல்வீங்கன்னு எனக்கு தெரியாது.
ஆனால் நான் யாரை சொல்வேன்னா;
1. குழந்தைகள்
2. பைத்தியகாரர்கள்
இப்பொழுது நான் குழந்தையின் சிரிப்பை பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.
ஏனென்றால் குழந்தைக்கு  சிரிக்க மட்டுமே தெரியும்.அதுவும் கள்ளம் கபடற்ற சிரிப்பு.
ஆக ,  நாம் எல்லோரும் குழந்தை மனம் கொண்டிருந்தாள் எவ்வளவு நல்லதாக இருக்கும்.
ஒரு  குழந்தையை எடுத்துக் கொண்டால் பொதுவாக ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்கு மாறி மாறி போய்க்கொண்டே இருக்கும் .அது யாரையும் பகைக்காது.
இதை தொடர்ந்து பார்த்தோம் என்றால் குழந்தைக்கு ஒரு சில நல்ல குணாதிசியங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.அவைகள் யாவை ?
1. ஆச்சர்யம்(sense of Wonder)
2. கள்ளம் கபடற்ற மனநிலை(Innocence)
3. மன்னிக்கும் ஞானம்(sense of Forgiveness)
4.ஒன்றாக காணும் ஞானம்(sense of unity)
5.  நம்பகத்தன்மை (sense of Hope).

உலகத்தில் நமக்கு தெரிந்தது எல்லாம் ஏழே ஏழு அதிசியங்கள் தான் ஏனென்றால் நம்மிடம் அப்படி சொல்லி வளர்த்துவிட்டார்கள்.

ஆனால் குழந்தையிடம் ஒரு பொருளை காட்டுங்கள் அது அதையே 7 மில்லியன் அதிசயங்களை கண்டது போல் ஆச்சர்யமாக பார்க்கும்.

ஏழாம் அறிவு படம் பார்த்தோம் ஆனால் எத்தனை பேரு நமக்கு ஏழாம் அறிவு ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வோம்.
ஆனால் அந்த ஏழாம் அறிவை குழந்தையிடம் காணலாம்.ஒவ்வொரு பொருளையும் குழந்தை ஆச்சர்யத்துடன் பார்க்கும் .குழந்தை முகமே சந்தோசமாக இருக்கும் பார்ப்பதற்கு.
நாம் எப்பொழுதும் சந்தோசமாக  காண குழந்தை மனம் நம்மிடம் வேண்டும்.
நாமும் குழந்தைகளாக இருந்து தான் பெரியவர்கள் ஆனோம் ஆனால் நம் பார்வை ஏன் சுருங்கிப்போனது . நம் சந்தோசம் ஏன் காணமல் போனது. சிந்திப்போம்!
அதனால்,  நம்மை நமது குழந்தை பருவத்திற்கு தள்ளப்பட்டு பார்ப்போம்.
நம் குழந்தை பருவத்தில் எப்படி இருந்தோம் என்று ?
இப்போது இடைவேளை மாணவன் மற்றும் டீச்சர்
மாணவன்: ஒரு டீச்சரை பார்த்து கேட்டானாம் , டீச்சர் ,டீச்சர் ஒரு டீச்சருக்கு எத்தனை பாடம் தெரியும்.
டீச்சர்: ஒரு பாடம்.
மாணவன்: பின் ஏன் எங்களுக்கு ஆறு   பாடம் நடத்துகிறார்கள் மற்றும் ஆறு   பாடம்  படிக்கச் சொல்கிறார்கள் . இது எப்படி இருக்கு. இன்றைக்கு குழந்தைகள் அவ்வளவு அறிவோடு இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு தெரியாதது என்று எதுவும் இல்லை.ஏனென்றால் , இன்றைக்கு அறிவியல் உலகத்திலும் , அலைபேசி உலகத்திலும் வளர்க்கப்படுகிறார்கள்.

நாம் சிறுவர்களாக இருக்கும் போது அம்மா ,அப்பா விளையாட்டு விளையாடி இருக்கோம் அறியாத பருவத்தில் விளையாட்டு பொருட்கள்  வைத்து சமைத்தும் விளையாடி இருக்கோம் சண்டை வரும்.
ஆனால் மறு  நாளும் அந்த விளையாட்டை திரும்ப விளையாடுவோம் ஏன்?
அப்பொழுதெல்லாம் நமக்கு பகை தெரியமால் இருந்தோம் பிறரை மன்னித்தோம் .
இன்று  நாம் காணும் குழந்தைகள் எல்லாம் மன்னிக்கும் மனநிலையுடன் இருக்கிறது . நம்மை தவிர.ஆகையால்  நாம் வாழும் இடங்களில் குழந்தை மனம் கொண்டு இறையரசை   கட்டி எழுப்ப முற்படுவோம் .

அபியும் நானும் என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள் அதில் அபி (குழந்தை) ஒரு பிச்சைகாரனை கொண்டுவந்து தன தந்தையிடம் நம் வீட்டில் இவரை வைத்து ஏதாவது வேலை கொடுத்து இங்கேயே தங்கச் சொல்வோம் என்கிறாள் .பின் அவருக்கு பெயர் வைக்கிறாள் .
ஒரு நாள்  அவரையும் தன குடும்பத்துடன் ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார்கள் அங்கு அவர் சாப்பிடும் போது அழுகிறார் அதற்கு தந்தை கேட்ப்பார் ஏன் என்று ? அதற்கு அந்த பிச்சைக்காரர்  குழந்தை  அபியை பார்த்து கூறுவார் இது என் அம்மா என்று .அந்த சீன் நம் கண்களை குளமாக்கிவிடும். நானும்  அழுதது உண்டு  அதை பார்த்து.
குழந்தை  அபியை போன்று நாம் எல்லோரையும் ஒன்றாய் காணும் ஞானம் வேண்டும் அதற்கு குழந்தை மனம் இருந்தால் மட்டுமே முடியும் .
ஆச்சர்யத்துடன் மற்றதை பார்க்கும் போது தான் நம்பும் தன்மையும் குழந்தைகளை போன்று அதிகரிக்கும்.

ஆக, நாம் குழந்தைகளை போன்று ஆச்சர்யத்துடனும் ,கள்ளம் கபடற்ற மனநிலையுடனும் ,மன்னிக்கும் ஞானத்துடனும், எல்லாவற்றையும் ஒன்றாக காணும் ஞானத்துடனும்,நம்பகத்தன்மையுடனும்    மனம் திரும்பி குழந்தைகளை போன்று வாழும் இடங்களில் இறையரசை கட்டி எழுப்ப முற்படுவோம்.

There is no way for happiness. Happiness is the only way.

ஆக ,குழந்தை மனநிலையை கொண்டு எப்போதும் சந்தோசமாக இருப்போம்.
இன்று வலைப்பதிவை அலங்கரிக்கும் குழந்தைகள் என் வீட்டு தங்கைகள் மற்றும் அண்ணன் குழந்தைகள்.(காவியா,கார்த்திகா,பிலோ, ,ஆண்டோ,ஜியானா,) என்னுடைய உலகத்தில் எனக்கு இவர்கள்  தான்   அழகு குழந்தைகள்.


2 comments:

  1. Congrats Kalai for the well thought-out post. You have given beautifully explained what it means to be childlike and childish. Good day.

    ReplyDelete
  2. Dear Kalai,Good job you have done.Do continue the same.

    ReplyDelete