Wednesday, 11 November 2015

உனக்குள் தேடு!

''இயேசு, 'வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென 
மின்னி ஒளிர்வதுபோல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்' என்றார்'' (லூக்கா 17:24)".

நாளைய வாசகங்கள் நமக்கு அதாவது அருள் நிலையில் உள்ளவர்களுக்கும் பொதுநிலையில் உள்ளவர்களுக்கும் இறையாட்சி என்றால் என்ன அதை யாரில் தேடவேண்டும் என்ற அழகான கருத்துக்களை முன்  வைக்கின்றது. 

இதை ஒரு கதை மூலமாக தொடங்க விரும்புகிறேன்.
ஒரு ஊரில் ஒரு ராஜ இருந்தார் அவருக்கு தீராத தலைவலி. அந்த தலைவலி தாங்க முடியாமல் ஒரு  ஞானியை கூப்பிட்டு கேட்டார் என் தலைவலி குறைய என்ன செய்வது என்று அதற்கு அந்த ஞானி பார்ப்பது எல்லாவற்றையும் பச்சையாக பாருங்கள் தலைவலி சரியாகிவிடும் என்றார்.

உடனே மன்னர் தன் நாடு முழுவதிலும் எல்லாவற்றிலும் பச்சை கலரில் பெயிண்டை அடிக்கச் சொல்லிவிட்டார்.இதை ஞானி கவனித்தார் என்ன இது எல்லாம் பச்சையாக இருக்கிறதே என்று.பிறகு பிறரிடம் இருந்து தெரிந்தும் கொண்டார்.நேர மன்னனிடம் சென்று நாடு முழுக்க பச்சை கலர் அடிப்பதை விட்டுவிட்டு நீர் மட்டும் பச்சைகலர் கண்ணாடி அணிந்து பிற பொருட்களை நோக்கி இருந்தால்   எப்படி இருந்திருக்கும் .

இப்போது உன்னில் இருக்கும் பிரச்சனையை தேடி அதை சரிசெய்வது எப்படி என்று தெரியாமல் உன் பிரச்சனையை ஊர் பிரச்சனை ஆக்கிவிட்டாயே என்றார்.அப்போது தான் மன்னர் செய்த தவறு தெரிந்தது.     
  
இதை ஏன் கூறுகிறேன் என்றால் நிறைய நேரங்களில் நாம் இறையாட்சியை தேடுவதும் இவ்வாறே அமைகிறது.நாம் வாழும் இடங்களில் இயேசு கற்றுத்தந்த அன்பு,நீதி,நேர்மை,அமைதி,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற இறையரசின் மதிப்பீடுகளை கட்டி எழுப்பினாலே போதும் இறையாட்ச்சியை இம்மண்ணில் கட்டி எழுப்பிவிடலாம் .

அதை நாளைய நற்செய்தி வாசகம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.


உலகில் வாழ்கின்ற எந்த மனிதரும் தம் வாழ்வு இந்த நாளில் இந்த மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என்று கூற இயலாது. நம் வாழ்வின் தொடக்கமும் முடிவும் நம் கைகளில் இல்லை. ஆனால் தொடங்கிய வாழ்வை எவ்வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதைப் பொறுத்த மட்டில் நாம் பொறுப்போடு செயல்பட இயலும். இயேசு கடவுளாட்சியின் வருகை பற்றியும் இவ்வுலக முடிவு பற்றியும் எருசலேமின் அழிவு பற்றியும் கூறிய செய்திகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன (காண்க: லூக் 17:20-37).

ஒன்றை மட்டும் நாம் உறுதியாகக் கொள்ளலாம். அதாவது, எதிர்காலம் பற்றி நமக்குத் தெரியாது; கடந்த கால நினைவு நம்மோடு உள்ளது. ஆனால் நிகழ்காலம் எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பது நம் கைகளில் உள்ளது. நாம் கடவுளைச் சார்ந்து வாழப்போகிறோமா, கடவுளின் வழியிலிருந்து விலகி நடக்கப் போகிறோமா என முடிவுசெய்ய அழைக்கப்படுகிறோம். 

இந்த முடிவை வேறு யாரும் நமக்கென்று தீர்மானிக்க முடியாது. நாமே நம் வாழ்வு பற்றி முடிவெடுக்க வேண்டும். இச்சுதந்திரத்தைக் கடவுள் நமக்குத் தந்துள்ளார். ஆனால் கடவுளின் நீதியை நம்மிடையே நிலைநாட்ட வருகின்ற மனுமகன் எப்போது மீண்டும் தோன்றுவார் என்பதை நாமறியோம். இதுவே இயேசுவின் ''இரண்டாம் வருகை'' என அழைக்கப்படுகின்ற ''நிறைவுக் காலம்''. அக்காலம் பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அக்காலத்தில் நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக இருப்போமா இல்லையா என்பதை நாம் இன்று, இங்கே தீர்மானிக்க வேண்டும்.

எதிர்பாராத நேரத்தில் முடிவு வரும் என்பதை நாம் இரு பொருள்களில் புரிந்துகொள்ளலாம். தனி மனிதர்களாகிய நமக்கு வருகின்ற முடிவு நம் சாவு எனலாம். அதை நாமே முன்கூட்டி நிர்ணயிக்க முடியாது. மற்றொரு பொருள் இந்த உலகம் நிறைவு பெறுகின்ற நேரம். இதுவும் வந்தே தீரும் என இயேசு கற்பிக்கிறார். 

ஆனால் எப்போது இந்த நேரம் வரும் என்பது பற்றி அவர் பதில் தர மறுத்துவிட்டார். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் தங்கள் நம்பிக்கையில் தளராமல் நிலைத்து நிற்க அழைக்கப்படுகிறார்கள். அப்போது மானிட மகனின் வருகை பற்றி அவர்கள் அஞ்சி நடுங்க மாட்டார்கள். 

ஏனென்றால் நீதி மிகுந்த கடவுள் இரக்கம் நிறைந்தவர் கூட. அவருடைய நீதியே இரக்கத்தின் வெளிப்பாடுதான். கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் பரிவையும் நாம் வாழ்வில் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது எதிர்காலம் நம்மை அச்சுறுத்துகின்ற ஒன்றாக இல்லாமல் நம்மை ஊக்கப்படுத்துகின்ற சக்தியாக மாறும்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல பல வித விதமான பெயரில் கிறிஸ்துவின் சபைகள் முளைக்கின்றன. இதோ இயேசு வருகிறார், அதோ அழைக்கிறார், கதவைத் தட்டுகிறார், குணப்படுத்துகிறார் என்ற பல பெயர்கள், இதோ இங்கே, அதோ அங்கே என்ற அழைப்புகள். "நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்."(லூக் 17'23)

இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது. வெளியே தேட வேண்டாம். அங்கு இங்கு என்று அலைய வேண்டாம். அது மின்னலென மாபெரும் சக்தியாக, உங்களிலும் சுற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலாக உங்களுள் உள்ளது.

உங்களுள் இருக்கும் இச்சக்தியை அடையாளம் காண வேண்டும். இருக்கும் இடம் விட்டு எங்கெங்கோ தேடி அலைந்து, பல்வேறு சபைகளைத் தேடி அலைந்து நகை நட்டை இழந்து, பணத்தை கொடுத்து, நேரத்தை செலவிட்டு, வேலை விட்டுவிட்டு, குடும்பத்தை பரிதவிக்க விட்டு,இறுதியில் பைத்தியம் பிடித்து அலைய வேண்டாம்.

நீ இருக்கும் உன் கத்தோலிக்க சபையில் இறையாட்சி நிறைவாக உள்ளது. உன்னுள், உன் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கும் இந்த மாபெரும் வல்லமையாம் இறையாட்சியை அவரது சாட்சியாய் வாழும்போது கண்டுணர்வாய். எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.

3 comments:

  1. Dear very good keep doing i request you to be little brief. May God bless you. May we find God in every word and deed of ours.
    Lovingly
    Antony DMI

    ReplyDelete
    Replies
    1. Dear Akka, How are you?Thank you for your suggestion akka.

      Delete
  2. Dear Thanking you for Projecting the style of living. Most of us are like the king. If every one practice the second part how beautiful the world would be!

    ReplyDelete