"உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்.உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 17:20).
இது என்னுடைய 101-வது போஸ்ட் கடவுளுக்கு நன்றி. என்னை இந்த காரியத்தை தொடங்க எனக்குள் நம்பிக்கை விதையை தூவிய தந்தை ஏசு கருணாநிதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நாம் இவ்வுலகில் வாழப்போவது ஒரு முறையே!அந்த ஒரு முறையும் தலை முறை வாழ்த்தும் அளவுக்கு வாழ வேண்டும் என்பது எல்லாருடைய விருப்பம்.
ஆனால் நம்பிக்கையுடன் வாழ்வதில்லை ஏன்?
ஒரு மனிதனுக்கு எத்தனை கைகள் என்று கேட்டால் பொதுவாக கூறுவது இரண்டு கைகள்.அது நம் உடம்பில் இருக்கும் கை.உடம்பில் இணையாத இரு கைகள் உண்டு.ஆக மொத்தம் நான்கு கைகள்.
அந்த நான்கு கைகள் எப்புடி? அது அப்படித்தான்.
எவ்வாறெனில் , ஒன்று வாழ்வில் உள்ள "வாழ்க்கை",மற்றொன்று வார்த்தையில் உள்ள "நம்பிக்கை".
வாழ்க்கை மற்றும் நம்பிக்கை இரண்டிலும் இருக்கும் கையை நம் உடம்பில் உள்ள கையுடன் சேர்க்கும் போது மொத்தம் நான்கு கைதானே.
அநேக நேரங்களில் வாழ்க்கையையும்,நம்பிக்கையையும் நாம் நினைப்பதே கிடையாது. அதனால் தான் வாழ்வில் தோல்வி அடைகிறோம்.
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்பதை நாம் உணர்ந்தால் ஒழிய நம்மால் எதையும் சாதிக்க முடியாது.
முடியும் என்றால் முடியும் ;முடியாது என்றால் முடியாது!
இதை இன்னொரு முறையிலும் சொல்லலாம். அதாவது ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் போது நாம் என்ன நினைக்கிறோமோ,அப்படியே நம் பயணமும் முடியும்.
பயணம் நிறைவாக முடியும் என்று நம்பினால் நிறைவாக முடியும்.
குறைவாக முடியும் என்று நம்பினால் குறைவாகவே முடியும்.
ஆக, எல்லாமே நம் நம்பிக்கையில் தான் இருக்கு பாஸ்.
மழை தண்ணீர் பாத்திரத்தில் நிறைய விரும்பினால் பாத்திரத்தின் அளவை பொறுத்தே மழை தண்ணீர் நிறையும். இதை நாம் நம்ப வேண்டும் மாறாக சின்ன பாத்திரத்தை வைத்துவிட்டு நிறைய தண்ணீர் எதிர்பார்க்க கூடாது.
நாம் பெரியவர்கள் என்று நினைத்தால் நாம் பெரியவர்கள்.நாம் சிறியவர்கள் என்று நினைத்தால் நாம் சிறியவர்கள் தான்.
நம் நம்பிக்கையை பொறுத்தே நமது எண்ணங்களின் வெளிப்பாடும்.
For Examble
In LIFE - F stands for "Faith"(நம்பிக்கை).Then remaining "LIE" ( பொய்).
Similarly In BELIEVE (நம்பிக்கை) . மீண்டும் "LIE" ( பொய்).
எனவே, வாழ்க்கையிலும், நம்பிக்கையிலும் உள்ள பொய்களை அல்லது முடியாதவைகளை நீக்க வேண்டும் அப்போதுதான் நாம் வெற்றியின் பாதையில் பயணிக்க முடியும்.
நமது வாழ்க்கை நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைய வேண்டும்.
நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை.
ஆக, நம்பிக்கையில் உறுதியாக நிலைத்து நிற்போம்.
பிறர் வாழ்வில் உயர நம்பிக்கை கரத்தை நீட்டுவோம்.
நான்கு கைகளையும் பயன்படுத்தி நம் வாழ்க்கையையும் , பிறர் வாழ்க்கையையும் உயர்த்துவோம்.
நம்மால் முடியாதது என்ற ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை என்று நம்புவோம்.இதைத்தான் மேற்கூறியிருக்கும் விவிலிய வார்த்தைகளும் நமக்கு உரைக்கிறது .
இதைத் தொடர்ந்து
பிறந்தால் இறப்போம் என்பதை நம்புவோம்!
தொடங்கினால் முடிப்போம் என்பதை நம்புவோம்!
போருக்குப் பிறகு அமைதி என்பதை நம்புவோம்!
இருளுக்குப் பிறகு ஒளி உண்டு என்பதை நம்புவோம்!
தோல்விக்குப் பிறகு வெற்றி உண்டு என்பதை நம்புவோம்!
இன்று நாம் கீழே இருந்தாலும் ஒரு நாள் உயர்வோம் என்பதை நம்புவோம்!
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே!
பெறுவதற்கு உலகம் உண்டு துணியும் பொழுதிலே!
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றும் இல்லையே!
இடை விடாத முயற்சி என்றும் பொய்த்ததில்லையே!
தொலைத்தது கிடைத்திடாமல் நினைத்தது நடந்திடாமல்!
இலக்குகள் முடிவதில்லை தோற்பதில்லை வெற்றியே!
ஆக,தூவுவோம் நம்பிக்கையின் விதைகளை நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும்.
Lord , increase our faith in you.

Congratulations on your 101st post. God bless your efforts. May you continue to inspire minds for the better. Good day.
ReplyDeleteHI DEAR WELL SAID, ABOUT HOPE. YES OUR LIFE LIVED ON HOPE. GOOD, KALAI
ReplyDelete