Tuesday 3 November 2015

துன்பத்தில் வரும் ஆன்மீக வளர்ச்சி



துன்பம் தரும் நன்மை :
          இளைனே , துன்பம் உலகை வளப்படுத்தியது போல வசதியும், வளமும் உள்ள வாழ்வு செய்ததில்லை.வேதனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் இனிமையான கீதங்களும் , புகழ் பெற்ற கவிதைகளும் , இதயத்தை நெகிழ வைக்கும் கதைகளும் , காவியங்களும் உருவாகியுள்ளன.
          துன்பங்களை எங்கே , இறக்கி வைப்பது என்று தெரியாமல் சுமந்து கொண்டே அலைவதால் ஒன்றின் பின் ஒன்றாக சிறு சிறு சுமைகள் சேர்ந்து எழுந்திருக்க முடியாதபடி செய்து விடுகிறது.
          துன்பம் இறைவனின் அனுமதியின் பேரில் வருகிறது  என்று ஏற்று அதை மீண்டும் இறைவனிடம் இறக்கி வைக்கிறோம் என்றால் அதுவே நமக்கு படிப்பினை தரும் சிறந்த ஆசானாக மாறி நமக்குச் கற்றுக் கொடுக்கும்.
          புனிதர்களின் வாழ்வில் துன்பங்கள் அவர்களைப் பக்குவப்படுத்தவும், புனிதப்படுத்தவும்,இறைவனுக்கு மகிமை சேர்க்கவும் உதவியுள்ளன . எனவே , பவுல் சொல்வது போல்" துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறோம். ஏனெனில் துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையால் எதிர் நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம் " என்கிறார்.
          துன்பத்தை அனுபவித்து அதிலே வெற்றி கண்ட தாவீது அரசர்" எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் வாழ்வின் விதி முறைகளை நான் கற்றுக் கொண்டேன்" என்கிறார். அவர் துன்பம் வாழ்வின் பாடத்தைக் கற்றுத் தரும் நல்ல ஆசிரியராக காண்கிறார் .உலையில் நெருப்பு எவ்வாறு பொன் வெள்ளியை சுத்தமாக்குகிறது அவ்வாறு துன்பத்தை, ஏற்கும் பக்குவம் இருந்தால் அது நம்மிடம் உள்ள தீமைகளை அகற்ற உதவும்.
          ஒரு முழு ஆப்பிள் பழத்தை அப்படியே சாப்பிட முடியுமா? அதைச் சிறு சிறு துண்டாக வெட்டி அல்லது கடித்து நன்றாகச் சுவைத்து தானே உண்ண முடியும்.
          துன்பம் என்றால் அப்படியே எடுத்துக் கொள்வது சரியல்ல.அந்த நிமிடத்தில் சந்திக்கும் துன்பத்தை எவ்வாறு  கையாள வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். துன்பத்தின் காரணங்களை சிறிது  சிறிதாக பிரித்து கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
          இன்றைய பொழுதில் நான் என்ன செய்ய வேண்டும், நாளைய தினத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும்? அது போதும் , இன்றும், நாளையும் மட்டும் வாழத் தேவையான ஆற்றல் எல்லோருக்குமே இருக்கிறது . ஆனால் , கடந்த காலத்திலேயோ  அல்லது வருங்கால கனவுகளிலோ வாழ்வதனால் வாழ்வில் காணும் வசந்தம் நழுவி விடுகிறது. 
எனவே, இன்றைக்குத் தேவையான ஆற்றல் துன்பத்தின் வழியாகவும் நம்மிடம் கடந்து வரலாம். கடினமான வேலையை செய்தால் கரம் கடினப்பட்டு வலி தெரியாமல் போவது போல வருகிற துன்பத்தை துணிவுடன் ஏற்கும் போது அதுவே நமது நன்மையாக மாறி நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வைக்கும்.
ஆன்மாவிற்கு அரு மருந்து:
துன்பத்திற்குப் பின்னால் ஒரு தெய்வீக ஒளி இருக்கிறது இளைனே ! துன்பம் என்பது நமது விருப்பத்திற்குத் தடை விதித்ததாக நினைக்கலாம். குழந்தை அழுகிறது என்பதற்காக கத்தியை விளையாடுவதற்கு தாய் கொடுப்பது உண்டா? எனவே, வளர்ந்து விட்ட நீ தாயிலும் மேலாக அன்பு செய்யும் விருப்பத்தை நிறைவு செய்யாதது ஏன்? என்று சிந்தித்துப் பார். நீர் விரும்பியது கிடைக்காவிட்டால் அது கடவுளின் மிகப்பெரிய கொடை என்று நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்த வீண்டும். விரும்பியது கிடைத்தது என்பதற்காக கத்தியை வாங்கின குழந்தை தொடர்ந்து மகிழ முடிமா? அதை விளக்கிச் சொன்னாலும்  புரியுமா? 
          அதுபோலத்தான் சில நேரம் துன்பம் ஏன் வருகிறது என்று பெரியவர்களுக்கும் புரிவதில்லை. துன்பம் இனிப்பு உரை போடப்பட்ட கசப்பு மாத்திரை. அதை ஏற்றுக்கொள்வதால் ஆன்ம நோய்  அகலும். துன்பத்தால் தூய்மையடைந்து நல வாழ்விற்கு கடந்து சென்று நிலை வாழ்வை அடைய முடியும்.துன்பம் தடைகளைத் தாண்டிச் செல்லும் பொன்னான வாய்ப்பாக கருத வேண்டும். துன்பத்திற்கும் மகிழ்வது ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டுகிறது. இன்பத்தில் இறைவனை நினைக்க நேரம் இருப்பதில்லை. துன்பத்தில் இறைவனை மறக்க முடிவதில்லை. திசை மாறிய பறவையாக பறந்து செல்லும் போது மீண்டும் சரியானப் பாதைக்கு திரும்ப உதவும் கலங்கரை விளக்கமாக துன்பம் செயல்படும். எனவே , துன்பம் வரும் போது யாரையெல்லாமோ காரணம் காட்டி மனம் வருந்துவதை விட இறைவனின் கொடை என்று ஏற்பது வாழ்வை வளப்படுத்தும்.
துன்பத்தைக் கையாள்வது எப்படி?
          துன்பத்தை துணிவுடன் எதிர் கொள்ளத் தெரிந்திருந்தால் எளிதாக வாழ்விலே சாதனை படைக்கலாம். இங்கே சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன ஒன்றையாவது பயன்படுத்தும் எண்ணத்துடன் மனதிலே பதித்து கொள்ளுங்கள்.
Ø கண்ணாடியை கையாளும் போது உடைந்து விடக்கூடாது என்று கவனமாகத் கையாளுவது போன்று துன்பத்தையும் கையாள வேண்டும். துன்பத்தையே பார்த்துக் கொண்ண்டு அதையே நினைத்துக் கொண்டிருந்தால் புதை மணலில் போராடுபவன்   போல அதிலே புதைந்து விட நேரிடும். எனவே, புயல் வீசும் போதும் இன்னல் வரும் வேளையிலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் இறை நம்பிக்கையோடு சந்திக்க  தெரிய வேண்டும். பயப்பட ஆரம்பித்தால் சிந்திக்க மறந்து போகும்,எண்ணத்தை சூழ்நிலை குறித்த கலக்கத்திலிருந்து நம்பிக்கைத் தரும் ஒன்றை நோக்கி மாற்ற வேண்டும்.
Ø துன்பத்தை பெரிது படுத்தாத வரை அது தன் போக்கிலே கிடக்கும்.அதையே நினைக்க  ஆரம்பித்தால் அட்டைப்போல ஒட்டி கொள்ளும்.(If you reject, mind will object. If you ignore, it won’t mind)
Ø “துன்ப வேளையில் என்னை நோக்கி கூப்பிடு. உன்னை விடுவிப்பேன். என்னை நீ மேன்மைப்படுத்துவாய் " என்று சொல்லும் இறைவனை நோக்கி அபயக் குரல் எழுப்பினால் கரம் நீட்டி தூக்கி விடுவார்.
Ø துன்பம் வந்த உடனே நாம் மட்டும் தான் துன்புறுவதாக எண்ணி துவண்டு போக வேண்டியதில்லை. எல்லோரும் வெவ்வேறு விதத்தில் துன்புறுகின்றனர். வாழ்க்கைப் பயணத்திலே துன்பமும் ஒரு பகுதிதான் என்று உணர்ந்திருப்பது நல்லது.
Ø துன்பத்தை கண்டு ஓடாமல் எதிர்த்து நின்று துணிவுடன் சந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பயந்து ஓடினால் நாய்கூட துரத்தி  வரும்.  எதிர்த்தால் அது பயந்து ஓடிவிடும். துன்பத்தைச் சந்திக்க அறிந்திருந்தால் வாழ்வையே சவாலாக மாற்றி  வாழ்ந்து  விடலாம்.
Ø துன்ப வேளையில் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று நம்ப வேண்டும். அவரை பங்குதாரராகக் கொண்டு வாழ்ந்தால் எந்தத் துன்பத்தையும் கையாள முடியும்.
Ø துன்பத்தைக் கொண்டே துன்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக,
          உறக்கம் வரவில்லை என்பது துன்பமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உறக்கமின்மைக்கு அதிக சோர்வு , பயம், சத்தம், சீதோஷ்ண நிலை இப்படியாக  பல காரணங்கள் இருக்கும். அதையே சிந்தித்துக் கொண்டிருந்தால் எதிர்மறை உணர்வுடன் போராடுகிறோம் என்று அர்த்தம். நாம் குறிப்பிட்ட நேரத்தில் உறங்குவதையே பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் உறங்காவிட்டால் சகிக்க முடியாது என்ற எண்ணம் இருக்கிறது .அதை எதிர்த்து கட்டுப்பாட்டை மீறிய இந்தச் செயலை மனம் எதிர்க்கிறது. அதன் விளைவாக உறக்கம் இல்லாத இரவுகள் தொடர்கின்றன.ஆனால், ஏன் உறக்கமின்மையை எதிர்க்கின்றோம்? குறிப்பிட்ட நேரம் உறங்கினால் தான் ஓய்வு என்று நினைக்கிறோம்.வீணாக விழித்திருந்து படுத்திருப்பது ஓய்வாகாது என்று நினைக்கிறோம். படுத்துக்கொண்டே என்ணத்தை உறக்கத்திலிருந்து எடுத்து வேறு எண்ணங்களை நினைக்க ஆரம்பித்தாலே உடல் தளர் நிலைக்கு வந்து விடும். உறக்கம் தானாக வந்து அணைத்துக் கொள்ளும். முயற்சி செய்து பாருங்கள்.
மாறாக, உலகமே தூங்குகிறது. நாம் மட்டும் தூங்கவில்லை. இன்று தூங்காவிட்டால் நாளை எப்படி வேலைக்குச் செல்வது? உடம்பு களைப்படைந்து விடுமே என்று குழம்பிக் கொண்டே  இருந்து விட்டு தூக்கமாதிரைப் போடுவது , பிறகு அதற்கு அடிமையாவது பலருக்கு வழக்கமாகி விட்டது. தளர் நிலை பயிற்சிகள் , வேறு விதமான செயல்பாடுகளை  ஏற்றுக்கொள்வது. உறக்கமின்மையின்  காரணத்தை அறிந்து அகற்றுவது , எப்படி மூளையை விடுதலையை அனுபவிக்கும் ஒன்றாக வைத்திருக்கும்  வரை  நாம் அடிமைப்பட முடியாது .
"துன்பத்தின் வேரையே
எடுத்தாகி விட்டது
துன்பத்திற்கு முடிவு காண
முடிகிறது துன்பத்தைக்
கையாள மிகச் சிறந்த வழி
துன்பத்தை கொண்டே
துன்பத்திற்கு முடிவு
காண்பதுதான்."
என்கிறார்  டோனி  டிமெல்லோ .
மனதில் பதிக்க வேண்டியவை:
Ø மூன்று மாதங்களாக வந்த சிந்தனைகள் எப்பொழுதும் மனதில் நிறுத்த வேண்டியவை .
Ø துன்பத்தின் காரணத்தை அறிந்திடுக . சுயநல நோக்கம் என்றால் உடனே அகற்றிடுக.
Ø துன்பம் நம்மைப் பயிற்று விக்கும் நல் ஆசான்.
Ø துன்பம்  தரும் பாடத்தை உணராமல் போவது சோகம்.
Ø வெளியிலிருந்து வரும் துன்பத்தை எதிர்த்து நின்றால் அது ஓடிவிடும்.
Ø துன்பத்தை கொண்டே துன்பத்தை முடிவு கட்ட வேண்டும்.
Ø பிறருக்காக துன்பப்படுவதை துணிவுடன் அணைக்கத் தெரிந்தவர் தாம் புனிதர்.
Ø பாகற்காயும் சுவையுடையதுதான். இனிப்பு மட்டும் அல்ல , கசப்பும் சுவை தான் என்ற எண்ணம் நம்மிடம் வேண்டும்.
Ø இறைவனும் நாமும் பங்குதாரராகச் சேர்ந்து சந்திக்க முடியாத துன்பமே இருக்க முடியாது.

2 comments:

  1. Dear sister, it is very nice to read. துன்பத்தை பெரிது படுத்தாத வரை அது தன் போக்கிலே கிடக்கும்.அதையே நினைக்க ஆரம்பித்தால் அட்டைப்போல ஒட்டி கொள்ளும்.(If you reject, mind will object. If you ignore, it won’t mind).I like this sentence sister.

    ReplyDelete